science

img

அரசு கேபிள் டிவி சேவை பாதிப்பு

சென்னை, நவ. 20- தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவ னத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவை திடீரென தடை பட்டதால் அரசு கேபிள் டி.வி. நிறுவ னத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல் ஏற்பட்டது.  பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய  தொழில்நுட்பக் குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதிகபட்சம் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கள் முழுமையாக சரிசெய்யப்படும். அரசு கேபிள் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதாக அரசு கூறியுள்ளது. மேலும், மென்பொருள் சேவை வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மீது சட்ட நட வடிக்கை மேற்கொள்ள கேபிள் டி.வி. நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவ தாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. 

விண்ணில் பாயும் நானோ செயற்கைகோள்கள்

சென்னை,நவ.20- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் வருகிற 26 ஆம் தேதி காலை 11.46 மணிக்கு பி.எஸ். எல்.வி.-சி54 ராக்கெட் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப் படுகிறது. இந்த ராக்கெட்டில் ஓசன் சாட்-3 என்ற புவி கண்காணிப்பு செயற்கை கோள் மற்றும் 8 சிறிய வகை நானோ செயற்கை கோள் விண்ணில் ஏவப்படு கிறது.

;