science

img

அறிவியல் கதிர்

விண்வெளி தகவல் தொடர்பில் புதிய சாதனை

பூமியிலிருந்து 16 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிலிருந்து லேசர் ஒளிக்கற்றை மூலம் தகவல்களை பெற்ற புதிய சாதனை நடந்துள்ளது. நாசா அனுப்பிய ஸைக்கி எனும் விண்கலத்தில் வைக்கப்பட்டிருந்த ஆழ்வெளி ஒளி தகவல் சாதனமான DSOC இதை நிகழ்த்தியுள்ளது. ஒளி மூலம் தகவல் அனுப்புவதில் இதுவே மிக நீண்ட தூரம் ஆகும். அக்டோபர் 13ஆம் தேதி அனுப்பப்பட்ட இந்த விண்கலம், நவம்பர் 14ஆம் தேதி கலிஃபோர்னியாவிலிலுள்ள ஹாலே தொலைநோக்கியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது. DSOC யின் அண்மை அகச்சிவப்பு ஃபோட்டான்கள் அங்கிருந்து பூமிக்கு வந்து சேர்வதற்கு 50 நொடிகளே எடுத்துக் கொண்டன.

மீன்கொத்திக்கு ரத்தக்கட்டு  ஏன் ஏற்படுவதில்லை?

மீன்கொத்திப் பறவைகள் மீனைப் பிடிப்பதற்காக நீரில் மூழ்கும்போது 40கி.மீ வேகம் வரை எடுத்துப் பாய்கின்றன. இந்த வேகத்தில் மனிதர்கள் நீருக்குள் பாய்ந்தால் தலைக்குள் கன்கஷன் எனப்படும் ரத்தக்கட்டுகள் ஏற்படும். ஆனால் இந்தப் பறவைகளுக்கு எதுவும் நேரிடுவதில்லை. சிக்காகோவிலுள்ள அருங்காட்சியக இயக்குனரும் படிநிலை உயிரியலாளருமான ஷானன் ஹேகெட் மற்றும் சாட் எலியாசன் என்பவரும் இது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். அந்த அருங்காட்சியகத்தில் உறைநிலையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த 30 வகைை மீன்கொத்திகளின் மரபணுக்களை ஆய்வு செய்தனர். இவற்றில் சில பாய்ந்து மூழ்கும் டைவ் செய்பவை; மற்றவை அவ்வாறு செய்யாதவை. இவை உலகெங்கிலுமுள்ள பல நிலப்பகுதிகள், தீவுப் பகுதிகள் ஆகிய இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டவை. இவை பாய்ந்து மூழ்கும் திறமையை ஒரே முன்னோர்களிடமிருந்து பெறவில்லை; தனித்தனியே சுயேச்சையாக வளர்த்துக் கொண்டுள்ளன. இதற்கு முன் செய்யப்பட்ட ஆய்வுகள்,

இவற்றின் மூக்கு நீண்டு கூர்மையானதாக மாறியுள்ளதை காட்டின. இது நீரில் திறமையாக பாய்வதற்கு உதவுகிறது. இப்போதய ஆய்வு 93 மரபணு மாற்றங்கள் நடைபெற்றுள்ளதைக் காட்டுகிறது. அவற்றில் டாவு எனும் புரதத்தை உற்பத்தி செய்யும் மரபணுவில் ஏற்பட்ட மாற்றம் முக்கியமானது. இந்தப் புரதம் மனிதர்களில் நரம்பு சிதைவு நோய்களான அல்செமியர் போன்ற நோய்களுக்கு காரணமாகக் காட்டப்படுகிறது. மேலும் பலமுறை ரத்தக் கட்டுக்கு உள்ளானவர்களின் மூளை திசுக்களிலும் இவை கட்டிகளாக காணப்படுகின்றன. ‘மீன்கொத்திகளில் இந்தப் புரதமே பாயும்போது ஏற்படும் கடுமையான அடியை தாங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது’ என்பது ஒரு ஆர்வமூட்டும் கருதுகோள் என்கிறார் ஹார்வர்ட்் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மரபணுவியலாளர் டிம் சாக்டன். பாய்ந்து மூழ்கும் நடத்தையின் பரிணாம வளர்ச்சியில்தான் இந்த மரபணு மாற்றங்கள் ஏற்பட்டதா அல்லது இவை ஒரு தற்செயல் நிகழ்வாகவும் இருக்கலாம். மரபணு மாற்றங்கள், குறிப்பாக டாவு புரதம் மீன்கொத்திகளில் என்ன பணி ஆற்றுகின்றன என்பது அடுத்த கட்ட ஆய்வாகும். இதைப் போன்ற ஆய்வுகள் பறவைகள் எவ்வாறு தங்கள் மூளையை பாதுகாத்துக் கொள்கின்றன என்பது குறித்த புரிதலை தந்தால் அவற்றை மனிதர்களுக்கு ஏற்படும் ரத்தக் கட்டு மற்றும் மூளைக் காயங்களுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் அது தொலைதூர எதிர்காலத்தில் உள்ளது.

சீனாவின் அதிவேக இணையதள தடம்

சீனாவின் அதிவேக இணையதள தடம் இப்போதுள்ள முக்கிய இணையதள வழித் தடங்களை விட 10 மடங்கு வேகமான இணைய  தள தடத்தை சீன நிறுவனங்கள் கூட்டாக அமைத்துள்ளன. இது ஒரு நொடிக்கு 1.2 டெரா பைட்டுகளை கடத்தக்கூடியது. சின்குவா பல்க லைக்கழகம், சைனா மொபைல், ஹுவாய் டெக்னால ஜீஸ் மற்றும் செர்னெட் கார்ப்பரேஷன் ஆகியவை  இணைந்து இதை சாதித்துள்ளன. 3000 கிமீ நீளத்திற்கு  அமைக்கப்பட்டுள்ள இத்தடம், பெய்ஜிங், வூஹான், குங்சூ ஆகிய நகரங்களை கண்ணாடி இழை வடங்க ளினால் இணைக்கிறது. உலகிலுள்ள பெரும்பான்மை யான இணையதள இணைப்புகள் நொடிக்கு 100 கிகா  பைட்டுகள் வேகத்திலேயே இயங்கும்போது சீன இணையதளம் 1200 கிகா பைட்டுகள் வேகத்தில் இயங்குகிறது. அமெரிக்காவில் கூட அண்மையில் மாறிய ஐந்தாம் தலைமுறை இணையதள சேவை  400கிகா பைட்டுகள் அளவிலேயே இயங்குகிறது. சீனாவின் எதிர்கால இணையதள தொழில்நுட்பக் கட்டுமானத்தின்(FITI) ஒரு பகுதியாகவும் சீன தேசிய கல்வி மற்றும் ஆய்வுத் திட்டத்தில் அண்மை யில் வலியுறுத்தப்பட்டதுமான இந்த தடம், ஜூலை யில் இயக்கப்பட்டு எல்லா சோதனைகளையும் வெற்றிகரமாக கடந்து தடங்கலில்லாமல் இயங்கி யது. அண்மையில் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்  கப்பட்டது. இதனுடய வேகத்தை புரிந்துகொள்ள வேண்டு மென்றால் ‘ஒரு நொடியில் 150 உயர் தெளிவு  திரைப்படங்களை இறக்க வல்லது’ என்கிறார்  ஹுவாய் தொழில்நுட்பத்தின் துணைத்தலைவர் வாங்க் லெய். இதைவிட வேகமான இணையதளத்தை அமைப்பதற்கான தொழில்நுட்பத்தையும் இது தந்துள்ளதாக FITIஇன் திட்ட தலைவர் வு ஜியான்பிங் ்தெரிவிக்கிறார். ஒரு அதி விரைவு ரயில்  தடம் எப்படி 10 தடங்களுக்கு மாற்றாக இருக்குமோ அது போல இந்த இணையதளம் என்று விளக்கு கிறார் சிங்குவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சு மிங்வெல். இந்த அமைப்பின் அனைத்து மென் மற்றும்  வன் பொருட்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.