science

img

இதுவரை இல்லாத மிகச்சிறிய கருந்துளை கண்டுபிடிப்பு

சூரியனை விட வெறும் 3.3 மடங்கு மட்டுமே பெரிய அளவில் உள்ள புதிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உருவில் பெரிய நட்சத்திரமானது தனது ஆற்றலை இழந்து உருக்குலைந்து வெடித்துச் சிதறும் போது அதீத ஈர்ப்பு விசையைக் கொண்ட கருந்துளையாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேவேளையில் வெடித்துச் சிதறும் போது நியூட்ரான் நட்சத்திரங்களாவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் சூரியனுடன் ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு மட்டுமே அளவில் பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சூரியனுடன் ஒப்பிடுகையில் 4000 கோடி மடங்கு பெரியது தொடங்கி குறைந்தது 5 முதல் 15 மடங்கு பெரிய கருந்துளைகளை இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், சூரியனை விட 3.3 மடங்கு மட்டுமே அளவில் பெரிய கருந்துளையை ஒகியோ மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. இதற்கு முன் சூரியனை விட 3.8 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;