science

img

தமிழகத்தில் நாளை அரிய சூரிய கிரகண நிகழ்வு

ஒரு கோடி பேர் காண அறிவியல் இயக்கம் ஏற்பாடு

கரூர், டிச.24- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில்  சங்க கூட்ட ரங்கில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், வானவியல் கருத்தாலாருமான டி.ஜெயமுருகன் கூறிய தாவது, சூரியன், நிலா, பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் அமைவதே இந்த சூரிய கிரகணம் உண்டாகிறது.  டிசம்பர் 26ம் தேதி காலை 8 மணி முதல் சூரிய கிரகணம் தொடங்கி  கிழக்கு வானில் உதயமாகும் சூரியனின் மேற்கு திசை யில் அதாவது, சூரியன் மேற்கு திசையில் முதலில் நிலவு மறைய தொடங்கும் அதற்கு பின் கொஞ்சம், கொஞ்சமாக சூரிய பிம்பம் மறைந்து பின்னர் காலை 11.16 மணி வரை இவ்வாறு பிறை வடிவில் சூரியன் காட்சி தரும். அதன் பின்னர் கிரகணம் விலகி சூரியன் முன்பு போல முழுமையாக காட்சி தரும். சுமார் 3.30 மணி நேரம் இந்த கிர கணம் நடைபெறுகிறது. இதற்கு இடைபட்ட நேரத்தில் காலை சுமார் 9.31 மணி முதல் 9.33 மணி வரையிலான இரண்டு நிமிடம் மட்டுமே தீ நெருப்பு வளையம் போல   சூரியனின் அற்புதமான காட்சியை பார்க்க லாம். இதைத் தான் வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் ஊட்டி, கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மட்டுமே மிகத் தெளிவாக பார்க்க முடியும். மற்ற மாவட்டங்களில் பகுதி சூரியனாக மட்டுமே தெரியும். இந்த சூரிய கிர கணத்தால் எந்தவித தீவினையும் ஏற்படாது.  அதே நேரத்தில் வெறும் கண்களால் சூரியனை பார்க்க கூடாது.  சூரிய கிரகணம் ஏற்படும் போது மட்டும் பார்க்கக் கூடாது என்பது இல்லை. சாதாரணமாகவே எப்போதுமே சூரியனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் கண்க ளில் உள்ள மெல்லிய நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு கண் பார்வை பறி போவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. எனவே, பாதுகாப்பான முறையில் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக சோலாளர் முறையில் தயாரிக்கப்பட்ட வானியல் கண்ணாடி,   தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. 

கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்க ளுக்கு இந்த அரிய வகை சூரிய கிரக ணத்தை பார்ப்பதற்கு கடந்த 11ம் தேதி யன்று செயல்முறை பயிற்சி அளிக்கப் பட்டது. மேலும் 10 ஆயிரம் பள்ளி மாணவர்க ளுக்கு சூரிய கிரகணத்தை பார்க்கும் கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் மூலம் அவர்களது குடும்பத் தில் உள்ள நபர்கள் என சுமார் 1 லட்சம் பேர் சூரிய கிரகணத்தை பார்க்கின்றனர். மேலும் மற்ற மாவட்டங்களை விட கரூர் மாவட்டத்தில் மிக தெளிவான வகையில் வானத்தில் சூரிய வளையம் நன்றாக தெரியும். எனவே கரூர் அடுத்துள்ள காந்தி கிராமம் விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் மாணவ- மாணவிகள் பார்ப்பதற்கு  தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் மாவட்டக் குழு சார்பில் வரும் வியா ழக்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை சிறந்த ஏற்பாட்டை செய்துள்ளது.  இது மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சூரிய கிரகணத்தை சுமார் 1 கோடி பேர் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தை பார்க்க தவறினால் அடுத்து 2031 ஆம் வருடம் மே மாதம் நடக்கும் சூரிய கிரகணத்தை தான் பார்க்க முடியும். எனவே, இந்த அரிய வகை சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வானவியலாளர்கள், ஆராய்ச்சி  மாணவர்கள் தமிழ்நாட்டில்  குவிந்துள்ள னர். 

பாதுகாப்பு கண் கண்ணாடி மூலம் இந்த சூரிய கிரகணத்தை 10 வினாடிகள் மட்டுமே தொடர்ந்து பார்க்க வேண்டும். அதன் பிறகு சிறிது இடைவெளி விட்டு, அதன் பிறகு பார்க்க வேண்டும் என்றார். மேலும், இந்த கிரகண ஆய்வுகள் மேற் கொண்ட போது தான் ஹீலியம் வாயுவை தமிழகத்தில் முதன் முதலாக கண்டு பிடித்ததாகவும் அவர் தெரிவித்தார். மாவட்ட செயலாளர் ஐ.ஜான்பாஷா, துணைத் தலை வர் பாஸ்கர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் மு.சுப்ரமணியன், மாவட்ட செயலாளர் கே. சக்திவேல் உள்ளிட பலர் உடன்இருந்தனர்.


 

;