science

img

வரும் மார்ச் 5-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிஐசாட் 1 - இஸ்ரோ அறிவிப்பு

இந்தியாவின் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட் 1, வரும் மார்ச் 5-ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 2020ம் ஆண்டிற்கான முதல் செயற்கைக்கோளான ஜிசாட் 30, பிரெஞ்சு கயானாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதை அடுத்து, ஜிஐசாட் 1 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான சோதனை பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்தநிலையில், 2275 கிலோ எடையுள்ள புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட்-1, ஜி.எஸ்.எல்.வி-எப் 10 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, வரும் மார்ச் 5-ஆம் தேதி மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
 

;