science

img

அடுத்த ஆண்டு சந்திரயான் 3

பெங்களூரு, ஜன.4- பூமியில் இருந்து மனிதர்களை விண்  வெளிக்குக் கொண்டு செல்லும் திட்டத்திற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு ‘ககன்யான்’ என பெயரி டப்பட்டுள்ளது. ககன்யான் திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று அறிவிக்கப்பட்டது.  ககன்யானின் நோக்கம், மனிதர்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அவர் களைப் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப கொண்டுவருவதில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதே ஆகும். ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கும். ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளன. 

ககன்யான் திட்டத்தின்படி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பாக இரண்டு முறை ஆளில்லா விண்கலங்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். சக விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:- இந்த ஆண்டு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் நிறைய இருக்கின்றன. பூமி கண்காணிப்பு செயற்கைகோள்களான EOS-02, EOS-4, EOS-6 ஆகியவற்றை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை அனுப்புவதற்கு முன்பு ஆளில்லா விண்கலங்களை அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது.  இவை தவிர சந்திரயான்-03, ஆதித்யா, எல்எல், எக்ஸ்போசாட்,  (XpoSat), ஐஆர்என் எஸ்எஸ் (IRNSS) மற்றும் உள்நாட்டில் உரு வாக்கப்பட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில்நுட்ப செயல்விளக்க பணிகள் ஆகியவை உள்ளன. சந்திரயான்-03 திட்டத்தை அடுத்த ஆண்டு மத்தியில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ககன்யான் திட்டத்தின்படி முதல் ஆளில்லா விண்கலத்தை, இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டு விழாவிற்கு (ஆகஸ்ட் 15, 2022) முன்னதாக விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வரு கின்றன. இந்த இலக்கை நம்மால் அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சந்திரயான்-3 வடிவமைப்பில் மாற்றங் கள் செய்யப்பட்டுள்ளது. இதில் நல்ல முன்னேற்றம் உள்ளது. EOS-02, EOS-04 மற்றும் EOS-06 ஆகிய மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை ஏவுவது பல மாதங்களாக தாமதமாகி வருகிறது. 2021-ஆம் ஆண்டில் ஏவுவது என திட்டமிடப்பட்டிருந்த இந்தியாவின் முதல் சூரிய  மின்னோட்டம் செயற்கைக் கோள் ஆதித்யா-எல் 1 உள்ளிட்ட பல பணிகள்  கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் காரணமாக தள்ளிப்போனது எனவும் சிவன் தெரிவித்துள்ளார்.

;