science

img

டிஆர்டிஒ-வின் ‘நிர்பய்’ ஏவுகணை சோதனை வெற்றி!

டிஆர்டிஓ சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ‘நிர்பய்’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிசாவில் உள்ள பாலசோர் அருகே சந்திப்பூரில் உள்ள டிஆர்டிஓ-வின் ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து  ‘நிர்பய்’ ஏவுகணை விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட இலக்கை சென்று தாக்கியது. 

இந்த ‘நிர்பய்’ ஏவுகணை தரை, கடல், வானில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. இலக்கை 42 நிமிடம் 23 வினாடிகளில் சென்று தாக்கி அழித்ததால், சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த ஏவுகணை முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. பல்வேறு வகைகளில் ‘நிர்பய்’ ஏவுகணை சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

இது அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் இருந்து 1000 முதல் 1500 கிமீ வரை சென்று தாக்கும் வல்லமை பெற்றது. முதல்முறையாக 2007-ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


;