science

img

ட்ரோன் உதவியுடன் எளிதாகிய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை!

அமெரிக்காவில் உள்ள மேரி லேண்ட் மெடிக்கல் மையத்தில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிறுநீரகத்தை ட்ரோன் உதவியுடன் கொண்டுவரப்பட்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 8 வருடங்களாக சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு, டயாலிசிஸ் செய்து வந்த 44 வயது பெண்ணிற்கு சிறுநீரகம் பழுதடைந்ததால், அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டனர்.

இந்நிலையில், அதி நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள ட்ரோன் உதவியுடன் மாற்று சிறுநீரகம் கொண்டுவரப்பட்டது. இந்த ட்ரோன், 400 அடி உயரத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று, மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்தைவிட பத்து நிமிடங்களுக்கு முன்கூட்டியே சிறுநீரகத்தை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தது. சரியான நேரத்தில் வேலை முடிந்ததால், நோயாளிக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 


;