science

img

சந்திரயான் 2 செயற்கைக்கோள் ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் தகவல்

சந்திரயான் 2 செயற்கைக்கோள், வரும் ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை 02.51 மணிக்கு, விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செயற்கைக்கோளின் புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான் 1 செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்பியது. அது, நிலவில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா, கனிம வளம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது. இதன் ஆயுட்காலம் 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு முடிந்தது. இதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. 

இதை அடுத்து, தற்போது சந்திரயான் 2 செயற்கைக்கோளை நிலவில் செலுத்த இஸ்ரோ  நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சந்திரயான் 2 திட்டம் மூலம் நிலவின் தென்துருவத்தில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த பாறைகள் பற்றிய அளவிடமுடியாத தகவல்கள் கிடைக்கும். மேலும், உலகம்  எப்படி தோன்றியது, தோன்றிய காலம் பற்றிய தெளிவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சந்திரயான் 2 செயற்கைக்கோள், வரும் ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை 02.51 மணிக்கு, விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள், ரோவர் வாகனத்தை நிலவில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த செயற்கைக்கோளின் புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

;