science

img

சந்திரயான் 2 சுற்றுப்பாதை மீண்டும் மாற்றம்

புதுதில்லி,ஜூலை 26- சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை மீண்டும் மாற்றும் பணி வெற்றிக்கரமாக முடிந்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்கு சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 22 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து இந்த விண்கலத்தின் புவி சுற்று வட்டப் பாதையை மாற்றும் முதல்  கட்டப்பணி நடைபெற்றது. அதாவது குறைந்தபட்சம் 230 கி.மீட்டர் தூரமும், அதிகபட்சமாக 45 ஆயிரத்து 163 கி.மீட்டர் தூரமும் கொண்ட சுற்றுப்பாதைக்கு மாற்றப் பட்டது. இதைத்தொடர்ந்து சந்திரயான்- 2-விண்கலத்தின் புவி வட்ட சுற்றுப் பாதையை மேலும் மாற்றி அமைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். அதன்படி வியாழனன்று நள்ளிரவு 1 மணிக்கு சந்திரயான் விண்கலத்தின் புவி வட்டப் பாதையை மாற்றும் பணி நடைபெற்றது. குறைந்த பட்சம் 251 கி.மீட்டர் தூரமும், அதிகபட்சம் 54 ஆயிரத்து 829 கி.மீட்டர் தூரமும் கொண்ட புவி வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த பணி வெற்றிக்கரமாக முடிந்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

;