science

img

சந்திரயான் -2 அறிவியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி

சென்னை, செப்.15- சந்திரயான் -2 அறிவியல்ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள் ளார். பொறியாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சேப்பாக்கத்தில்  நடைபெற்ற  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களி டம் கூறியதாவது: இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கே பொறியாளர்களின் தேவை உள்ளது. நாட்கள் செல்ல செல்ல விக்ரம் லேண்டருடன் தொடர்பு கிடைப்பதில் சிரமம் ஏற்படத்தான் செய்யும்.  சந்திர யான் ஒன்றை விட சந்திரயான்-2 மிகவும் துல்லிய மான கணிப்புகளையும் தகவல்களையும் கொடுக்கும். சந்திரயான் -2 அறிவியல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி யை பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

;