science

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- அமெரிக்காவில் 50 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொள்ளும் மோடி கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியும் பங்கேற்பு.
ச.சா - அங்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்துகிட்டு இருக்குதுல்ல..!!
 

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்:- அமெரிக்காவுடனான பல்வேறு பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு.
ச.சா - இந்தியாவுல இருக்குற பிரச்சனைகள எப்போ கவனிப்பீங்க..??
 

செய்தி :- பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா கைது.
ச.சா - அப்போ இவ்வளவு நாளா அவர் சட்டவிரோதக் காவல்ல இருந்தாரா..??
 

 உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்:- பொருளாதார மந்தநிலை நல்லதுதான்.
ச.சா - மக்களோட துயரம் உங்களுக்கு கொண்டாட்டமோ..??

;