science

img

கூகுள் அறிவியல் கண்காட்சியில் பங்குபெற 18 இந்திய மாணவர்கள் தேர்வு!

கூகுள் நிறுவனத்தின் அறிவியல் கண்காட்சியில் பங்குபெறுவதற்கான 100 இறுதி போட்டியாளர்களின் பட்டியலில், 18 இந்திய மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

கூகுள் நிறுவனத்தின் 2019 ஆண்டுக்கான அறிவியல் கண்காட்சியானது, 13 முதல் 18 வயது உடைய மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் பங்குபெற்றனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதார, சுற்றுச்சூழல், சாலை பாதுகாப்பு, நீர் பற்றாக்குறை, இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு போன்ற தலைப்புகளின் கீழ் உள்ள பொது பிரச்சனைகளுக்கு தீர்வு கானும் வகையில் உள்ள படைப்புகளை சமர்ப்பித்தனர். இந்த படைப்புகளை மதிப்பீடு செய்து, இறுதியாக உலகம் முழுவதிலும் 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 18 இந்திய மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதனை அடுத்து, இந்த 100 மாணவர்களில் இருந்து 20 மாணவர்கள் மட்டுமே கலிஃபோர்னியாவில் வரும் ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதில் வெற்றிபெறும் மாணவருக்கு கல்வி உதவித்தொகை நிதியாக 50 ஆயிரம் டாலர்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


;