science

img

நேபால் நாட்டின் முதல் செயற்கைக்கோள்!

நேபாள விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நேபாளிசாட்-1, அமெரிக்காவில் இருந்து நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதற்கு நேபாளிசாட்-1 என பெயரிடப்பட்டுள்ளது. அந்த செயற்கைக்கோள் அமெரிக்காவின் விர்ஜினியாவில் இருந்து நேற்று அதிகாலை 2.31 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும், நாளை இரவு 10.45 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி தெரிவித்துள்ளது.

இந்த நேபாளிசாட்-1 செயற்கைக்கோள் 1.3 கிலோ எடையில், கனசதுரம் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 400 கி.மீ தூரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் நேபாளிசாட்டை அமர்த்த திட்டமிட்டுள்ளனர். இந்த செயற்கைக்கோள், நாள் ஒன்றுக்கு நான்கு முறை பூமியை சுற்றி வரும். ஒவ்வொரு சுற்றுக்கும் 6-ல் இருந்து 10 நிமிடத்திற்கு ஒரு முறை புகைப்படம் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, “நேபாளம் முதன்முறையாக சொந்தமாக தயாரித்த செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. இது நாட்டுக்கு பெருமை” என நேபாள பிரதமர் கே.ஆர்.சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.