science

img

முதல் முறையாக வேறு பால்வெளியில் ஆக்சிஜன் மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு

விஞ்ஞானிகள், முதல் முறையாக வேறு பல்வெளியில் ஆக்சிஜன் மூலக்கூற்றை கண்டுபிடித்துள்ளனர். 

பூமியிலிருந்து அரை பில்லியன் ஒளி ஆண்டிற்கு அப்பால் உள்ள பால்வெளி ஒன்றில் ஆக்சிஜன் இருப்பது முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆக்சிஜன் ஆனது மூலக்கூற்று வடிவில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில், அதிகமாக காணப்படும் வாயுக்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் ஆக்சிஜன் உள்ளது. முதல் இடங்களில் ஹைட்ரஜனும், இரண்டாம் இடத்தில் ஹீலியமும் காணப்படுகின்றன.

இந்நிலையில் பூமி இருக்கும் பால்வெளிக்கு வெளியே உள்ள மற்றொரு பால்வெளியில் ஆக்சிஜன் மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருக்கக்கூடிய சாத்தியம் தொடர்பான ஆய்வுகளை மேலும் ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.