tamilnadu

img

தனிமனித இடைவெளி விதியை தொடர்ந்து மீறும் பாஜக பெண் எம்.பி....

புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில், பாஜகபெண் எம்.பி. ஒருவர் தொடர்ந்து தனிமனித இடைவெளியை மீறிவரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரளாவைப் போன்றே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பாராட்டுக்களையும் பட்நாயக் ஆட்சி பெற்றிருக்கிறது. இப்போதுவரை ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.இந்நிலையில், ஒடிசாவில் பாஜக-வைச் சேர்ந்த பெண்எம்.பி. அபராஜிதா சாரங்கி,கொரோனா கால தனிமனிதஇடைவெளியை தொடர்ந்து மீறி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ஜூன் 4 அன்று, ஊரடங்குசூழலில் தனிமனித இடைவெளிவிதிகளை மீறினார் என அபராஜிதா மீது புகார் எழுந்தது. அனைத்து தரப்பு மக்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் ஊரடங்கை மீறியதற்காக அபராஜிதா, அபராதம் கட்டினார். அவர் மீதுஎப்.ஐ.ஆரும் பதிவானது.ஆனால், பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை ஒன்றில்,தனிமனித இடைவெளியை மீறிதனது ஆதரவாளர்களுடன் கூட்டமாக கலந்துகொண்டு, அபராஜிதா மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. செய்தியில் பரபரப்பாக தனது பெயர் அடிபட வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபடுகிறார் என பிஜூ ஜனதா தளம்குற்றம் சாட்டியுள்ளது.