science

img

பூமிக்குள் இருந்து ஹீலியம்

பிரபஞ்சத்தின் உருவாக்கத் திற்குக் காரணமாக இருந்த பெரு வெடிப்பு (big bang) நிகழ்விற்குப் பிறகு தோன்றிய பழமையான அரிய ஹீலியம் வாயு பூமியின் கருப்பகுதியில் (Earth’s core) இருந்து உமிழப்படுகிறது என்று கணினித் தொகுப்பு முறையில் (computational) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹீலியம் 3  என்ற இந்த வாயு பெருவெடிப்பின் போது தோன்றியது.

சூரிய நெபுலாவின் பகுதி

தொடர்ந்து இந்த வாயு சூரிய  நெபுலாவின் (Solar nebula) பகுதி யாக மாறியது. சூரிய நெபுலா என்  பது பிரம்மாண்டமான, அதிவேகத் தில் சுழன்று கொண்டிருக்கும் தூசுக்கள் மற்றும் வாயுக்கள் அடங்கிய பகுதி. சூரிய குடும்பம் இந்த நெபுலாவில் இருந்தே உரு வானது என்று கருதப்படுகிறது. பூமியின் உட்பகுதியில் பெருமள வில் ஹீலியம்3 வாயு உள்ளது என்பது இந்த ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

பூமி தோன்றியது எங்கிருந்து?

பூமி உள்ளிட்ட கோள்கள் நெபுலாவின் உட்பகுதிக்குள் இருந்தே தோன்றின என்ற கருத்திற்கு இக்கண்டுபிடிப்பு வலுச் சேர்த்துள்ளது. அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பல்கலைக்கழக புவி இயற்பியல் பிரிவு ஆய்வாளர் பீட்டர் ஆல்சன் தலைமையில் அமைந்த விஞ்ஞானிகள் குழு இது  குறித்து ஆராய்ந்தது. ஹீலியம்3  என்பது ஹீலியம் தனிமத்தின் ஒரு ஐஸோடோப்.

ஹீலியம்3

சாதாரண  ஹீலியத்தின் ஒரு அணுவில் இரண்டு நியூட்ரான்கள் உள்ளன. ஹீலியம் 3இல் ஒரே ஒரு நியூட்ரான் மட்டுமே உள்ளது.  பூமி யில் ஹீலியம் 3, 0.0007% மட்டுமே காணப்படுகிறது. ஹைடிரஜனின் கதிரியக்க ஐஸோடோப் டிரிடியம் சிதையும்போதும் ஹீலியம்3 உரு வாகிறது. என்றாலும் இவ்வாயு சூரியக் குடும்பத்தில் உருவாக பெரு வெடிப்பே காரணம்.

மோதல்

ஆண்டுதோறும் ஹீலியம்3 இரண்டு கிலோகிராம் அளவிற்கு பூமியில் இருந்து உமிழப்படுகிறது. ஒருகாலத்தில் இந்த வாயு பூமி யில் விரவிக் காணப்பட்டது என்று  நம்பப்படுகிறது. பூமியின் மீது அளப்பெரிய நிறையுடைய ஒரு  பொருள் 400 கோடி ஆண்டுகளுக்கு முன் மோதியதால் இந்த வாயு பூமி யில் இருந்து பெருமளவு வெளி யேறிவிட்டது என்று ஆய்வாளர் கள் கருதுகின்றனர்.

சந்திரன் தோன்றியது எவ்வாறு?

இந்த மோதலின்போதே சந்திரன் உருவானது என்றும் ஒரு  சாரார் கருதுகின்றனர். சந்திரனின்  மண்ணில் இந்த வாயு கணிசமாகக்  காணப்படுகிறது. இது 10 லட்சம் டன் அளவிற்கு இருக்கலாம் என்று  விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். வருங்காலத்தில் மனிதன் நில விற்கு சென்று குடியேறும்போது விலைமதிப்பு மிக்க ஒன்றாக இது  கருதப்படுகிறது.

எரிபொருளாக ஹீலியம்3

எதிர்காலத்தில் பூமியில் நிறு வப்படும் அணுக்கரு இணைவு  உலைகளில் ஹீலியம்3 எரி பொருளாகப் பயன்படுத்தப் பட்டால் அதன் மூலம் பெருமள வில் ஆற்றல் உற்பத்தி செய்யமுடி யும் என்று ஊகிக்கப்படுகிறது. பல  உலக நாடுகள் நிலவிற்கு செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில் அங்கு சுரங்கம் தோண்டுதலின்போது (Moon mining) இந்த வாயு விற்கு முக்கிய இடம் உள்ளது.