ஈக்களும் - அறிவியல் - ஆய்வுகளும்
மனித உடல் குறித்து அறிவதற்கு, விலங்கு களை பயன்படுத்துவது ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்டதாம். புராதான கிரேக்கர் களில் இது தொடங்கியதாம். அதன் பின், 12ஆம் நூற்றா ண்டில் அரேபிய மருத்துவர் இபன் ஜுஹர் மனிதர் களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் முன், அதை விலங்குகளுக்கு செய்து பார்த்துள்ளார். 19ஆம் நூற்றாண்டில் ஆய்வுகளுக்கு எலிகள் பிரதானமாக பயன்பட்டன. ஏனெனில் அவை எங்கும் எளிதாக கிடைப்பதும் அடைபட்ட நிலையிலும் அவை நீண்ட காலம் பிழைத்திருப்பதும் காரணங்கள் ஆகும். 1900களில் ஹார்வர்டை சேர்ந்த பூச்சியியலாளர் சார்லஸ் வுட்வொர்த், பழ ஈக்களை ஏராளமாக வளர்த்தார். மரபியலை சேர்ந்த ஆய்வாளர்களுக்கு அவற்றை பரிந்துரைக்கவும் செய்தார். அதிலிருந்து ஆய்வுகளுக்கு ஈக்களின் பயன்பாடு வாய்மொழி வழியாக பரவியது. அதன் பிறகு 1910இல் கொலம்பி யாவை சேர்ந்த தாமஸ் ஹன்ட் அதற்கென தனி ஆய்வகமே ஆமைத்தார். ஈக்கள் நிறைந்த குடுவை களும் கூரையிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் வாழைப்பழங்களுமாக அது காட்சியளித்தது. இன்றைக்கு தொற்று நீக்கப்பட்டு எழிலாக காட்சியளிக்கும் சோதனை சாலைகளுக்கு அது முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. பழ ஈக்களின் குறுகிய வாழ்நாள் காலம், மரபியல் ஆய்வுகள் வேக மாக முன்னேற ஏதுவாக இருந்தது. பாலூட்டிகளில் எலிகள் பிறந்த மூன்றாவது மாதத்திலேயே இன விருத்தி க்கு தயாராகி விடுகின்றன; அவற்றின் பேறுகாலம் 21 நாட்களே. ஆனால் ஈக்கள் 10 நாட்களிலேயே ஒரு முழு தலைமுறையையும் உருவாக்கிவிடுகின்றன. மேலும் அவற்றின் மரபணுத் தொகுதி (ஜீனோம்) சிறியது என்பதால் மரபணுக்களும் குணாதிசயங் களும் எவ்வாறு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படு கின்றன என்பதை ஆய்வு செய்ய அவை சிறந்த கருவி களாக விளங்குகின்றன. இதுவரை ஒன்பது விஞ்ஞானி கள் ஈக்கள் குறித்த ஆய்விற்காக நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக்ஸ், டயர்கள் ஆகிய உற்பத்தியில் உப பொரு ளாக மாசு விளைவிக்கும் ஒரு வேதிப்பொருள் உண்டா கிறது. இதனால் மனிதர்களுக்கு புற்று நோய், சர்க்கரை நோய், பார்க்கின்சன் எனும் நடுக்கு நோய் மற்றும் பல கோளாறுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. மேலும் அது கர்ப்பப்பையையும் பாதிக்கிறது என்பது எலிகள் மற்றும் குரங்குகளில் நடத்தப்பட்ட சோதனை களில் தெரிய வந்துள்ளது. அது எவ்வாறு நிகழ்கிறது என்பதை பழ ஈக்கள் மீது செய்யப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.
தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு சிக்கன சூரிய ஆற்றல் தீர்வு
உலகில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமை யாகிக் கொண்டு வருகிறது. 2025ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகை யில் 60 சதவீதம் பேர் தண்ணீர் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் நீரை குடிநீராக்குவது இதற்கு ஒரு தீர்வாகும். ஆனால் கடலிலிருந்து வெகு தூரத்திலுள்ள மக்களுக்கு இது பயன்படாது. அவர்கள் நிலத்தடி நீரையே நம்பி இருக்கின்றனர். அதிக அளவு நிலத்தடி நீர் எடுக்கப்படும் போது அது உவர்நீராகிவிடுகிறது. இதையும் மாற்று சவ்வூடு பரவல் அல்லது மின்பகுப்பு மூலம் நல்ல குடிநீராக்க இயலும். இந்த இரண்டு முறைகளிலும் அதிக அளவில் மின்சாரம் தேவைப்படும். சூரிய ஒளியி லிருந்து ஆற்றல் பெற்று இம்முறைகளை இயக்க லாம். ஆனால் அதற்கும் மின்கலங்கள் தேவைப்படும். அவை அதிக செலவு பிடிப்பதுடன் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியிடுவதும் அதிகமாகும். இந்த பிரச்சனைகளை தவிர்க்கும் விதமாக அமெரிக்க எம்ஐடி அறிவியலாளர்கள் மின்கலங்கள் இல்லாமல் சூரிய ஒளியை பயன்படுத்தி உவர் நீர் அல்லது உப்பு நீரை நல்ல குடிநீராக்கும் முறையை கண்டறிந்துள்ளார்கள். சூரிய ஒளி சீரானதாக இருக்காது. மேகங்கள் மறைக்கும்போது சூரிய ஆற்றல் தடைபடும். இதை சரி செய்யும்விதமாக ஒரு கட்டுப்பாட்டு பொறியை அமைத்தார்கள். சூரிய ஒளியின் அளவிற்கேற்ப உட்செலுத்தப்படும் தண்ணீரின் அளவு மாற்றப்படுகிறது. ஒரு குடியிருப்பு அளவில் இது பரிசோதிக்கப்பட்டுள்ளது. சூரிய ஆற்றலில் 94% இதில் பயன்பாடாக மாறியுள்ளது. ஒரு முழு நகரத்திற்கும் விநியோகிக்கக்கூடிய அளவில் மேற்கொண்டு சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் ஆய்வின் முதன்மை ஆசிரியர் வின்ட்டர்.
ஏவுகலங்கள் மறு சுழற்சியில் ஒரு முன்னேற்றம்
ராக்கெட் துறையில் ஏவுகலத்தை திரும்பப் பயன்படுத்துவது செலவை குறைக்கும் மிக முக்கியமான ஒன்று. அண்மையில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஏவுகலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. இதற்கு முன், விண்ணில் செயற்கைக் கோள் போன்றவற்றை செலுத்திய பின் ராக்கெட் பூஸ்ட்டர்கள் கடலில் நிறுவப்பட்ட தளத்தில் விழுவது வழக்கம். தற்போது ஏவு தள உறையிலேயே அது மீட்கப்பட்டது. ஏவுகோபுரம் பிரம்மாண்டமான இயந்திரக் கைகள் கொண்டது. அவைதான் கீழே விழும் 232 அடி உயரமுள்ள ஏவுகலத்தை பத்திரமாக பிடித்துக் கொண்டது. ஐந்தாவது சோதனை ஏவுதலிலேயே இது சாத்தியமாகியுள்ளது. அதிக சுமைகளை ஏற்றிச் செல்லும், முழுவதும் மறு சுழற்சி செய்யக்கூடிய ராக்கெட்டுகளை ஏவும் முயற்சியில் இது ஒரு முக்கிய முன்னேற்றம் ஆகும்.