science

img

பாராசிட்டமால் குறித்த டிரம்பின் கருத்து தவறானது - லான்செட் ஆய்வறிக்கை எச்சரிக்கை!

கர்ப்பகாலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது குழந்தைகளில் ஆட்டிசம், ADHD, போன்ற நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகளை ஏற்படுத்தும் என்ற அமெரிக்க ஜானாதிபதி டிரம்பின் கருத்து ஆதாரமற்றது என லான்செட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
The Lancet மருத்துவ இதழில் வெளியான இந்த ஆய்வில், கர்ப்பகாலத்தில் பாராசிட்டமால் பயன்பாடு மற்றும் குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் கூறுகையில், கர்ப்பகாலத்தில் தேவையான நேரத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது பாதுகாப்பானது. தேவையற்ற பயத்தால் மருந்தை தவிர்ப்பது, தாயின் காய்ச்சல் மற்றும் வலி சரியாக சிகிச்சை செய்யப்படாமல் போகும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.
எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளும் பாராசிட்டமால், கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதே என்று ஆய்வு உறுதிப்படுத்துகிறது.