சிதம்பரம் இரவிச்சந்திரன்
சிமெண்ட் உற்பத்தியால் ஏற்படும் கார்பன் உமிழ்வில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு இடையில் உமிழ்வின் அளவு இரு மடங்கு அதிகரித் துள்ளது. நார்வேயில் உள்ள சர்வதேச கால நிலை மாற்றம் & சுற்றுச்சூழல் ஆய்வு மையம் (Centre for International Climate change & Environment CCICERO), உலகக் கார்பன் திட்டம் (Global Carbon Project) ஆகிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளில் இது கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கும் உமிழ்வு
2002ல் இப்பிரிவின் மூலம் 104 கோடி டன் கார்பன் உமிழ்வு ஏற்பட்டது. 2021ல் இது 209 கோடி டன்களாக உயர்ந்துள்ளது. உலக கார்பன் உமிழ்வில் சிமெண்ட் தொழில் மூலம் 7% உமிழ்வு ஏற்படுகிறது. கார்பன் உமிழப்படும் அளவில் ஆண்டுதோறும் 2.6% அதிகரிப்பு ஏற்படுகிறது. 1992 முதல் உமிழ்வின் அளவு மூன்று மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது.
கார்பன் உமிழ்வின் அடர்த்தி
சிமெண்ட் உற்பத்தியின் மூலம் உருவாகும் கார்பன் உமிழ்வின் அடர்விலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 2015ல் இருந்ததை காட்டி லும் 2020ல் 9.3% உயர்வு ஏற்பட்டுள்ளது. சில நாடுகளில் கொரோனா பொதுமுடக்கத்தின் போதும் பரவலாக தொடர்ந்த கட்டுமான நட வடிக்கைகளே உலகளவில் இதற்குக் காரணம்.
கார்பன் உமிழ்வின் மூலம்
மற்ற கட்டுமானத் துறைகளைக் காட்டிலும் இத்தொழில் மூலம் உமிழ்வு அதிகம் ஏற்படு கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எஃகு தயாரிப்பு முறையின்போது வெப்பம் அதிகம் தேவைப்படுகிறது. சிமெண்ட் உற்பத்தியின் போது ரசாயண வினைகள் மூலம் அதிக உமிழ்வு ஏற்படுகிறது. இத்தொழிலில் உண்டாகும் அதிக வெப்பம் கூடுதல் காலம் காற்று மண்டலத்தில் தங்கி நிற்கிறது.
க்ளிங்கர்
சிமெண்ட் தயாரிப்பில் க்ளிங்கர் என்ற பொருளின் உற்பத்தி முக்கிய இடம் பெறுகிறது. சுண்ணாம்புக்கல், கால்சியம் கார்பனேட் போன்றவை 1480 முதல் 1540 வரை டிகிரி செல்சியர்ஸ் வெப்பநிலையில் சூடுபடுத்தப்படும் போது உருவாகும் கால்சியம் ஆக்ஸைடே க்ளிங்கர் எனப்படுகிறது. இதன் உற்பத்தியின் போது சுண்ணாம்புக்கல்லில் இருந்து வெளி யேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு காற்று மண்டலத்தில் கலக்கிறது.
ஒவ்வொருவரும் ஒரு கிலோகிராம்
உலகளவில் கட்டுமானத்துறையில் முக் கியப்பொருளாக சிமெண்ட் கருதப்படுவ தால் இது இல்லாமல் கட்டுமானங்கள் சாத்திய மில்லை. கட்டடம், சாலை, பாலங்கல் போன்ற வை கட்ட சிமெண்ட் முக்கியப்பொருளாக உள்ளது. உலகளவில் பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதரும் சராசரியாக தினம்தோறும் ஒரு கிலோகிராமிற்கும் கூடுதலாக (2.2 பவுண்டு) சிமெண்ட்டைப் பயன்படுத்துகிறார்.
கடினமான செயல்
800 கோடி உலக மக்கள் மூலம் உமிழப்படும் கார்பன் உமிழ்வு குறைவானதில்லை என்ப தையே இது எடுத்துக்காட்டுகிறது. சிமெண் உற்பத்தியில் பசுமை வழிகள் உள்ளன என்றாலும் உமிழ்வின் அளவை உடனடியாக குறைப்பதும், கட்டடங்களில் இருந்து இப்போது பயன்படுத்தப்படும் சிமெண்ட்டின் அளவை முற்றிலும் தவிர்ப்பதும் கடினமான செயல் என்று கருதப்படுகிறது.
பசுமை சிமெண்ட்
இத்தொழில் மூலம் உமிழப்படும் கார்பனின் அளவை முழுமையாக 2050ம் ஆண்டிற்குள் குறைத்தாலும் எஃகு, விமானப் போக்குவரத்து போன்றவற்றின் மூலம் உருவாகும் கார்பன் உமிழ்வு தொடரும் என்று சர்வதேச ஆற்றல் முகமை (IEA) கூறுகிறது. என்றாலும் உலக அரசுகளின் தலையீடு, பசுமை சிமெண்ட் போன்றவற்றின் மூலம் கார்பன் உமிழ்வை 2050ம் ஆண்டிற்குள் சுழி நிலைக்குக் கொண்டுவரமுடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
உலகளவில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம்
மற்றொரு வழி பசுமை எரிபொருட்கள் பயன் பாட்டை ஊக்குவித்தல். சர்வதேச அளவில் கார்பன் உமிழ்வில் 9 சதவிகிதத்திற்குக் காரண மாக இந்தியா இருக்கிறது. சிமெண்ட் வழி கார்பன் உமிழ்வில் இந்தியாவிற்கு உலகில் இரண்டாவது இடம். உமிழ்வில் வியட்நாம், துருக்கிக்குப் பின்னால் அமெரிக்கா இருக் கிறது. பசுமை எரிபொருட்களும் பசுமை சிமெண்ட்டும் நடைமுறைக்கு வருமா? கார்பன் உமிழ்வில்லாத உலகம் உருவாகுமா?