politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் :- அரசியல் மாற்றத்தை உணர்த்துவதாக உள்ளாட்சித் தேர்தல் அமைய வேண்டும்.
ச.சா - உள்ளுர் பிரச்சனைகள வெச்சுதான வாக்களிப்பாங்க..?? ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளப் பத்தி அப்படித்தான உங்க கட்சி சொல்லிருக்கு..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:- உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தால்தான் வளர்ச்சிப் பணிகள் நடக்கும்.
ச.சா - அப்புறம் எதுக்கு உங்க கூட்டணிக் கட்சி தேர்தல நடத்தாம இருந்துச்சு..??
 

ராணுவத்தளபதி விபின் ராவத்:- வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமைப்பண்பு அல்ல.
ச.சா - அரசியல் நிகழ்வுகள்ல கருத்து சொல்றது ராணுவத் தளபதியோட பண்பு இல்லையே..??
 

பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா :- ஒரு தேநீர் வியாபாரி பிரதமர் ஆனதை எதிர்க்கட்சிகளால் பொறுக்க முடியவில்லை.
ச.சா - பொறுக்க முடியாத நிலைமைக்கு மக்களையே தள்ளுனதுதான பிரச்சனையே..??

;