politics

img

மேலும் 14 எம்எல்ஏக்கள் கர்நாடகாவில் தகுதி நீக்கம்

பெங்களூரு, ஜூலை 28 - கர்நாடகாவில் மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏ-க்கள் 16 பேர் ராஜினாமா செய்ததையடுத்து, அங்கு மிகப் பெரிய அரசியல் குழப்பங்கள் எழத் தொடங்கி யது. இதன் விளைவாக குமாரசாமி தலை மையிலான கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவின் குதிரை பேரத்தின் விளைவாக அந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது.  இதையடுத்து, கர்நாடக பிரக்ஞா வந்த ஜனதா கட்சி எம்எல்ஏ ஆர்.சங்கர், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ரமேஷ்ஜார்கி ஹோளி,  மகேஷ் குமட்ட ஹள்ளி ஆகிய 3 பேரையும் சட்டப்பேர வை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து கர்நாடக பேர வைத் தலைவர் ரமேஷ்குமார் கடந்த வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து, ஆட்சி அமைக்க உரிமை கோரிய பாஜக மாநிலத்தலை வர் பி.எஸ். எடியூரப்பா கடந்த வெள்ளிக் கிழமை மாலை முதல்வராக பொறுப் பேற்றார். அவர் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் திங்களன்று (இன்று) நடைபெறுகிறது.  இதனிடையே, நம்பிக்கை வாக் கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு சபா நாயகர் தாமாக ராஜினாமா செய்கிறாரா என்று பார்ப்போம், இல்லையெனில் அவர் நம்பிக்கையில்லாத் தீர் மானத்தை கொண்டுவருவோம் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் தெரிவித் திருந்தார். இதனால், கர்நாடக அர சியலில் நாளுக்கு நாள் குழப்பங்கள் உதயமாகி வந்தன. 

இந்த நிலையில், சபாநாயகர் ரமேஷ் குமார் ஞாயிறு காலை 11.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திப்பதாக அறி விப்பு வெளியானது. அதன்படி, செய்தி யாளர்களைச் சந்தித்த ரமேஷ்குமார் மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏக்களை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக அவர் உத்தரவிட்டார். அவர் பேசுகை யில், “திங்களன்று நம்பிக்கை வாக் கெடுப்பை நடத்துமாறு பி.எஸ். எடி யூரப்பா கேட்டுக்கொண்டார். நம்பிக் கை வாக்கெடுப்பில் அனைத்து எம்எல்ஏ-க்களும் பங்கேற்க வேண்டும். சபாநாயகராக கர்நாடகாவில் நிகழும் அரசியல் சூழ்நிலைகளால் நான் மிகப் பெரிய அழுத்தத்துக்கு உள்ளாகி யுள்ளேன். இந்த விஷயங்கள் அனை த்தும் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.   ரோஷன் பைக், ஆனந்த் சிங், ஹெச்.  விஷ்வநாத் மற்றும் எஸ்டி சோமசேகர் ஆகியோர் உட்பட அதிருப்தி எம்எல் ஏக்கள் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்  பட்டுள்ளனர். இதில் 11 பேர் காங்கிரஸ் உறுப்பினர்கள், 3 பேர் மஜத உறுப்பி னர்கள்” என்றார்.  இதன்மூலம், கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.  17 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, சட்டப்பேர வையின் பலம் 207 ஆக குறைந் துள்ளது. எனவே, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான எண்ணிக்கை 104 ஆகும். ஆனால், பாஜக வசம் 105 உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதாக எடியூரப்பா தரப்பு கூறியுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, ராஜினாமா செய்த காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களான ஸ்ரீமந்த் பாட்டில், ரோஷன் பைக், ஆனந்த் சிங், விஸ்வ நாத், சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா, கோபாலையா, நாராயண கவுடா, நாகராஜ், பி.சி.பாட்டில், பிரதாப் கவுடா பாட்டில், சுதாகர், சிவராம் ஹெப்பர் ஆகிய 14 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ரமேஷ் ஜர்கிஹோலி, மகேஷ் கும தல்லி, சங்கர் ஆகிய மூன்று எம்.எல். ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். மொத்தம் 17 எம்.எல். ஏக்கள் இதுவரை தகுதிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

;