politics

ஏழாம் கட்டத் தேர்தல் நிறைவு

புதுதில்லி, மே 19-மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஞாயிறன்று (மே 19) நடைபெற்றது. மேற்குவங்கத்தில் பல்வேறு இடங்களில் திரிணாமுல் காங்கிர சினர் வன்முறையில் ஈடுபட்டனர்.ஏழு மாநிலங்கள் மற்றும் சண்டிகர்யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் 59 மக்களவைத் தொகுதிகளுக்கு ஞாயிறன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்துடன் ஏழு கட்டங்களாகநாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்து க்கும் மேலாக 542 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.தமிழ்நாட்டில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவை தேர்தல் ஆணை யம் ரத்து செய்தது. வாக்குப்பதிவில் குளறுபடி, கள்ள ஓட்டு போன்ற காரணங்களால் தமிழ்நாடு, கேரளம், அருணாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில வாக்குச்சாவடிகளில் ஞாயிறன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

இடைத்தேர்தல் மறுவாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் சூலூர், அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 தொகுதி களுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும், தருமபுரி மக்களவை தொகுதியில் 8 வாக்குச் சாவடிகளி லும், தேனியில் 2, திருவள்ளுர், கடலூர், ஈரோடு தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடி என 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவும் ஞாயிறன்று நடை பெற்றது. கேரள மாநிலம் கண்ணூர்,காசர்கோடு மக்களவைத் தொகுதி களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, 12, என ஆறு கட்டங்களாக ஏற்கனவே வாக்குப்பதிவு நடந்துள்ளது. ஏழாவது கட்டமாக ஞாயிறன்று பஞ்சாபில்-13, உத்தரப்பிரதேசம் -13, மேற்குவங்கம் -9, பீகார் -8, மத்தியப்பிரதேசம் -8, இமாசலப்பிரதேசம் -4, ஜார்க் கண்ட் -3, சண்டிகரில் 1 என 59 மக்களவைத் தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. பிர தமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் ஞாயிறன்று தேர்தல் நடைபெற்றது. முன்னதாக தேர்தல் பிரச்சாரம் முடிவுற்ற நிலையில் தனது படை பரிவாரங்களுடன் கேதார்நாத் சென்ற மோடி அங்குள்ள ஒரு குகையில் பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்து தியானத்தில் ஈடுபட்டார். ஏழாம் கட்ட தேர்தலில் ஒட்டு மொத்தமாக 918 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மேற்குவங்கத்தில் வன்முறை

இதுவரையில் முடிந்துள்ள 6 கட்ட தேர்தலிலும் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரசினர் வன்முறையில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிகளை கைப்பற்றியது, வாக்காளர்களை தடுத்தது, தாக்குதலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்த 630 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்துமாறு ஏற் கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தேர்தல் ஆணை யரிடம் கடிதம் அளித்துள்ளது. 

கையெறிகுண்டுகள் வீச்சு

இதையடுத்து இம்முறை வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பையும் மீறி பல்வேறு வாக்குச்சாவடிகளில் திரிணாமுல் காங்கிரசார் வன்முறை களில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று பஷிர்ஹத் தொகுதியின் 189ஆவது வாக்குச்சாவடிக்கு வெளியில் வாக்காளர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். அந்த வாக்குச் சாவடியில் 100 பேர் வரை வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.இஸ்லாம்பூரில் கையெறி குண்டுகளை வீசி வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் தடுக்கும் முயற்சிகள் நடந்துள்ளன. ஊடகவிய லாளர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



;