politics

img

ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தது

சென்னை,மே 9- கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்துவதற்காக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பாதிப்பை உறுதி செய்ய பிசிஆர் கருவிகளை பயன் படுத்தும்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள 1.20 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் மூலம் வெள்ளிக்கிழமை வரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 416 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா  பரிசோதனையை மேலும் விரைவுபடுத்தும் வகையில், தமிழகத்திற்கு மேலும் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந் துள்ளன.

இந்தக் கருவிகள் விரை வில் அனைத்து மாவட்ட மருத்துவ மனைகளுக்கும் பிரித்து அனுப்பப் படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  மேலும், பரிசோதனைக்காக கூடுதலாக 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க தென் கொரியாவிடம் தமிழக அரசு  கொள்முதல் ஆணை பிறப் பித்துள்ளதாகவும் தெரிவித்துள் ளனர்.

;