politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- ரூ.1.76 லட்சம் கோடி உபரிநிதியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு.
ச.சா - இனிமே என்ன.. கூப்புடுங்க அம்பானி, அதானிய.. பங்கு போட்டுரலாம்..!!
 

பாஜக எம்.பி. பிரக்யா சிங் :- பாஜக மூத்த தலைவர்கள் இறப்புக்கு எதிர்க்கட்சிகளின் “தீய சக்திகள்” காரணம்.
ச.சா - இந்த தீய சக்திய முதல்ல மக்கள் விரட்டுனுமே..!!
 

ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் :- எனது அழைப்பை வைத்து ராகுல் காந்தி அரசியல் செய்கிறார்.
ச.சா - வர மாட்டார்னு நெனச்சு அழைப்பு விடுத்து அரசியல் பண்ணுனது நீங்கதான..??
 

உச்சநீதிமன்றத்தில் இந்துத்துவ அமைப்பான நிர்மோகி அகாரா :- சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை எங்களுக்கே தர வேண்டும்.
ச.சா - சர்ச்சையாக்குனதே நீங்க தான..??

;