politics

img

முஸ்லிம் வாக்குகள் பாஜகவுக்கு தேவையில்லை - கே.எஸ்.ஈஸ்வரப்பா பேச்சு

பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என கர்நாடக முன்னள் அமைச்சரும்பாஜக மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஷிவமொ தொகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற வீரசைவ-லிங்காயத் கூட்டத்தில் பேசிய கே.எஸ்.ஈஸ்வரப்பா கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா தொகுதியில் 50,000 முதல் 55,000 வரை முஸ்லிம் ஓட்டுகள் உள்ளது அதில் ஒரு முஸ்லிம் வாக்கு கூட பாஜகவுக்கு தேவையில்லை என நேரடியாக கூறுகிறேன் என்று பேசியுள்ளார்.
 அதுமட்டுமில்லாமல் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக எதிர்கட்சிகள் ஹிந்துகளையும் ,முஸ்லிம்களையும் பிரித்து வருகிறார்கள் .ஹிந்துக்களை தாழ்ந்தவர்களாகவும் முஸ்லிம்களை உயர்ந்தவர்களாகவும் ஆக்குவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்று அவர் பேசியிருப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சில தேசிய வாத முஸ்லிம் மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என கூறியுள்ளார்.

;