politics

புதிய இந்தியாவை நீங்களே வைத்துக் கொண்டு பழைய இந்தியாவை தாருங்கள்! குலாம் நபி ஆசாத் சாடல்

புதுதில்லி, ஜூன் 24- வெறுப்பும், கோபமும் நிறைந்த புதிய இந்தியாவை நீங்களே வைத்துக்கொண்டு, அன்பும் கலாச்சாரமும் நிறைந்த பழைய இந்தியாவை தாருங்கள் என்று மாநிலங் களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியுள்ளார்.  காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் மாநி லங்களவையில் திங்களன்று பேசினார். அவர் பேசுகையில், “கும்பல் கொலை மற்றும் வன்முறையின் ஆலையாக ஜார்க்கண்ட் மாநிலம் மாறி யுள்ளது. ஒவ்வொரு வாரமும் தலித்துகள் மற்றும் முஸ்லிம் கள் கொல்லப்படுகின்றனர்.  பிரதமர் அவர்களே, அனை வரையும் உள்ளடக்கிய அனை வருக்குமான வளர்ச்சிக்காக நாங்கள் உங்களுடன் இருக் கிறோம். ஆனால், அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அதை எங்குமே பார்க்க முடியவில்லை. அத னால், நான் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். புதிய இந்தியாவை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அன்பும், கலாச்சாரமும் இருந்த எங்களது பழைய இந்தியாவை திருப்பித் தாருங்கள். முஸ் லிம்களும், தலித்துகளும் பாதிக் கப்படும்போது இந்துக்கள் வேதனையடைவார்கள். அதுவே இந்துக்களுக்கு ஏதே னும் ஒன்று ஏற்பட்டுவிட்டால், முஸ்லிம்களும் தலித்துகளும் கண்ணீர் சிந்துவார்கள்.

மனிதர்களை கண்டு பயம்
வெறுப்புணர்வு, கோபம் மற்றும் கும்பல் கொலைகள் ஆகியவற்றுக்கு பழைய இந்தி யாவில் இடம் கிடையாது. ஆனால், புதிய இந்தியாவில் மனிதர்களே ஒருவருக்கு ஒருவர் எதிரியாக இருக் கிறார்கள். காடுகளில் கூட விலங்குகளை கண்டு பயப்பட வேண்டாம். ஆனால், காலனி களில் மனிதர்களை கண்டு பயப்பட வேண்டியுள்ளது.  இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்து வர்கள் ஆகியோர் ஒருவருக் கொருவராக வாழ்ந்து வந்த இந்தியாவை தாருங்கள்” என்றார்.

;