politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:- திமுகவுக்கு தேர்தல் பயம்.
ச.சா - உங்களுக்கு பயம் இல்லேனா, உள்ளாட்சி அமைப்பு எல்லாத்துக்கும் நடத்திருக்கலாமே..??
 

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி :- உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவது காலம் காலமாக நடப்பதுதான்.
ச.சா - அரதப் பழசு கட்டப் பஞ்சாயத்துகளைச் சொல்கிறாரோ..??
 

உ.பி. முதல்வர் ஆதித்யநாத்:- கிரிமினல் குற்றம் என்றாலே சமாஜ்வாதிக் கட்சிதான்.
ச.சா - பாலியல் குற்றவாளி செங்கர் உங்க கட்சி எம்.எல்.ஏ.தானே..??
 

அதிமுக தலைமை :- அதிமுகவினர் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.
ச.சா - உள்குத்து பெரிசா இருக்குனு வந்த செய்தி உண்மையோ..??

;