politics

img

விளம்பரம் பெரும் விளம்பரம் பொய் பரப்ப ஒரு விளம்பரம்

விளம்பரம் பெரும் விளம்பரம்

பொய் பரப்ப ஒரு விளம்பரம்

விளம்பரம் நாளும் விளம்பரம்

கோடிக்கணக்கில் விளம்பரம்

மோடி அரசின் வியாபாரம்! - வெறும்

திட்ட அறிவிப்பால் மாய்மாலம் !

                       (விளம்பரம் ...)

அனுபல்லவி

கார்ப்பரேட்டின் மூலதனம்

கவர்மென்ட் அமைக்க நரித்தந்திரம் -தன்

கவர்மென்ட் அமைக்க நரித்தந்திரம்

                          (விளம்பரம்...)


சரணம்-1

பலப்பல இந்தியா பிறந்தாச்சு!

நோஞ்சான்களா அது மாறிப்போச்சு!

வசனம் : கிளீன் இந்தியா, மேக் இன் இந்தியா

டிஜிட்டல் இந்தியா, ஸ்டேன்ட் அப் இந்தியா

ஸ்டார்ட் அப் இந்தியா ...ஸ்ஸ்ஸ்ஸ்

அப்பா மூச்சு முட்டுதே (பலப்பல...)

ஏழைங்க ஜனத்தொகை கூடிப்போச்சு! -இப்ப

இருக்கிற கோவணமும் களவு போச்சு!

                         (விளம்பரம் ...)

சரணம் - 2

துடைப்பத்தை வெச்சிக்கிட்டு ஒரு போஸு! -ஜவுளிக்

கடை போல் அரசே மாறிப் போச்சு! 

எடுத்ததுக்கெல்லாம் ஒரு பில்டப்பு! -அட

எப்ப ஓயும் இவங்க அல்டாப்பு!

                         (விளம்பரம் ...)

சரணம் - 3

பூக்கடைக்கு ஒரு விளம்பரம் தேவையா?

பொற்கால ஆட்சியின்னா தண்டோராவும் வேணுமா?

சாக்கடையில் தினமும் சந்தனம் கரைச்சு

எம்புட்டு ஊத்தினாலும் அந்த துர்நாற்றம் தான் போகுமா?

                          (விளம்பரம்...)


;