politics

img

வங்க மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம்.. .குடிமைச் சமூக இயக்கங்கள் மேற்குவங்கத்தில் பிரச்சாரம்....

கொல்கத்தா:
மேற்குவங்க அரசியல் களத்தை,பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய2 கட்சிகளுக்கு இடையிலானதாக மாற்ற கார்ப்பரேட் ஊடகங்கள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. அந்த 2 கட்சிகள் இடையிலான லாவணிக் கச்சேரிகளையே செய்தியாக அளித்துக் கொண்டிருக்கின்றன.ஆனால், இடதுசாரிகளின் கைகளில்தான் மேற்குவங்க மாநிலமும்,மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்என்பதை, கடந்த 10 ஆண்டுகால மம்தா பானர்ஜியின் ஆட்சி உலகிற்கு தெளிவுபடுத்தி விட்டது. மத,அரசியல் வன்முறைக் காட்சிகள்,அடுத்தக் கட்சித் தலைவர்களை மொத்தமாக விலைபேசி வாங்கும் மலிவான கலாச்சாரம் எதுவும் இடதுசாரிகள் ஆட்சியின்போது மேற்குவங்கத்தில் அரங்கேறியதில்லை. இப்போது வங்கத்தில் அதைத்தவிர வேறு அரசியலே இல்லை என்றாகி இருக்கிறது. பாஜக-வும் திரிணாமுல் காங்கிரசும் தங்களிடமுள்ள ஆட்சியதிகாரத்தை வைத்து, மேற்குவங்க மக்களின் பெருமையை உடைத்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே நிதானமாக- அதேநேரம் மிகுந்த வலுவுடன்  இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த அணிக்கானஆதரவும், மக்கள் மத்தியில் நாளுக்குநாள் பெருகிக் கொண்டிருக்கிறது.அப்பாஸ் சித்திக் தலைமையில் அண்மையில் புதிதாக உருவான இந்திய மதச்சார்பற்ற முன்னணி (Indian Secular Front) கட்சி, இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்துள்ளது.சித்திக் திரிணாமுல் காங்கிரஸ்கட்சியை கடுமையாக விமர்சித்து வருபவர். வங்கத்தில் முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரித்தாளும் அரசியலை மம்தா செய்துவருவதாகவும், அவரை அம்பலப்படுத்தாமல் வங்கத்தில் பாஜக அரசியலை தோற்கடிக்க முடியாது என்றும் கூறி வருபவர். பழங்குடியினர் மற்றும் தலித் தலைவர்களுடன் நெருக்கமான உறவைப் பேணும் அப்பாஸ் சித்திக்கிற்கு, தெற்கு பர்கனா, வடக்கு பர்கனா, ஹூக்ளி, பர்த்வான், ஹவுரா, பிர்பும்போன்ற தெற்கு வங்காள பகுதிகளில்குறிப்பிடத்தக்க செல்வாக்கும் உண்டு.இந்நிலையில்தான், “பெங்கால் அகெய்ன்ஸ்ட் பாசிஸ்ட் பாஜக - ஆர்எஸ்எஸ்” என்ற குடிமைச் சமூகஅமைப்பும், ‘பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்’ என்ற முழக்கத்தை கையில் எடுத்து, தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இது மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

;