செய்தி :- மின்கட்டணம் 30 சதவிகிதம் வரையில் உயர்கிறது.
ச.சா - மின்வாரியம் லாபத்துல ஓடுறதா அமைச்சர் சொல்லிட்டு இருந்தாரே..??
*******
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:- ஏமாற்றுபவர்கள் எப்போதும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.
ச.சா - உங்க ஆட்சி தொடர்றத வெச்சு மட்டும் அப்புடி சொல்லிராதீங்க..!!
*******
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் :- சிரியாவில் நடத்தப்படும் தாக்குதல்களை ரஷ்யா நிறுத்த வேண்டும்.
ச.சா - நேத்து தாக்குனது ரஷ்யா இல்ல.. இஸ்ரேல்தான் தாக்குதல் நடத்துச்சு...!!
*******
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் :- நீதிபதிகள் நியமன விவகாரத்தில் வெறும் தபால் அலுவலகம் போன்று மத்திய அரசு செயல்படாது.
ச.சா - கதை, வசனம், இயக்கம் எல்லாமே நீங்கதான்னு கொண்டு வரப்பாக்குறீங்களா..??