politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் :- மகாராஷ்டிரத்தில் தகுதியை அரசியல் கணக்கு வென்று விட்டது.
ச.சா - இந்தக் கணக்க சொல்லிக் குடுத்ததே நீங்கதான..?
 

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் :- தமிழகத்தில் இனி ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது.
ச.சா - பொதுத்தேர்வு வெச்சு மாணவர்கள வெளியேத்தப் போறதுனால சொல்றீங்களா..?
 

இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் :- இந்துக் கலாச்சாரம்தான் தமிழ்க்கலாச்சாரம்.
ச.சா - தமிழ்க் கலாச்சாரத்துக்குள்ள சாதியப் புகுத்துனதுதான இந்துக் கலாச்சாரம்..??
 

மத்திய அமைச்சர் அமித்ஷா :- தொழில் அதிபர்கள் அஞ்சத் தேவையில்லை.
ச.சா - இன்னொரு லட்சம் கோடி ரூபாயக் குடுக்கப் போறாங்களோ..??

;