politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- ஐதராபாத்தில் இஸ்லாமிய வாலிபர் கொண்டு வந்ததால் உணவை வாங்க ஒருவர் மறுப்பு.
ச.சா - திட்டமிட்டு செய்யுறாங்களோ..? இத்தனைக்கும் உணவு ஆர்டரே இஸ்லாமியர் நடத்துற ஓட்டல்ல இருந்துதான்..!!
 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:- டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல்.
ச.சா - எந்த டிசம்பர் மாசம்..??
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- இந்த இடைத்தேர்தல் வரலாற்றுச் சிறப்புமிக்க இடைத்தேர்தல்.
ச.சா - நாடாளுமன்றத் தேர்தல்ல 38 தொகுதிகள்ல தோத்தது என்ன..??
 

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் :- சரக்கு சேவை வரி மேலும் எளிமையாக்கப்படும்.
ச.சா - சிறு, குறு நிறுவனங்கள இழுத்து மூடாம விட மாட்டீங்களோ..??

;