politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் உதயகுமார் :- ஒரு முறையாவது திமுகவுக்கு மத்திய அரசு பாராட்டு வழங்கியதா?
ச.சா - முதல்ல ஒண்ண தெளிவா சொல்லுங்க.. இது “வாங்குனதா” அல்லது “வழங்குனதா”??

பாமக நிறுவனர் ராமதாஸ் :- தமிழகத்தில் அடுத்த ஆளுங்கட்சி பாமகதான்.
ச.சா - முதல்ல இருக்குற ஒரே ஒரு எம்.பி.ய நாடாளுமன்றத்துக்கு ஒழுங்கா போகச் சொல்லுங்க..!!

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் :- ஆட்சியில் உள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதையே பின்பற்றுவோம்.
ச.சா - போராட்டங்களுக்கு எதிரா கருத்துச் சொல்லணும்னு அவங்கதான் சொன்னாங்களா..??

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் :- பீகார் கூட்டணியில் எந்தப்பிரச்சனையும் இல்லை.

ச.சா - ஆனாலும் மத்திய அரசுல சேர மாட்டேன்னு சொன்னது அப்புடியேதான இருக்கு..!!


 

;