politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- சீனாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு.
ச.சா - எப்படா கூப்புடுவாங்கனுதான இவரும் காத்துகிட்டு இருக்காரு..!?!
 

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ :- அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று சொல்லக்கூடாது.
ச.சா - ஆமா.. நீட், ஜி.எஸ்.டி,,, பாஜக கூட்டணினு ஜெயலலிதா செய்யக்கூடாதுன்னு சொன்னதெல்லாம் கூட செஞ்சுட்டாங்களே...?!?
 

செய்தி :- 70 நாட்களுக்குப் பின் காஷ்மீரில் செல்போன் சேவை.
ச.சா - இப்பதான் இதுவே...கேட்டா 99 சதவிகிதம் அமைதியா இருக்குன்னு சொல்லுவாங்க...!?!
 

பிரதமர் மோடி :- தமிழக மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ச.சா - ரெண்டு நாள் நாடகமே தாங்கலையே எங்களுக்கு...?!?

;