politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பிரதமரின் தொலைக்காட்சி உரையானது, அவர் தனது பொறுப்பை கைவிட்டு முற்றாக விலகி நிற்கிறார் என்ற அறிவிப்பே தவிர வேறல்ல. நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான சுகாதார நெருக்கடி நிலையைஎப்படி தனது அரசு எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்தோ, எப்படி மக்களின் உயிர்களை பாதுகாக்கப் போகிறது என்பது குறித்தோ ஒரு வார்த்தைக் கூட அவர் தனது உரையில் குறிப்பிடவில்லை.  

இந்தியா இன்றைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையில் சிக்கி நிற்கிறது. இதனால்ஏராளமான உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இதை எதிர்கொள்வதற்கு என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து அவர் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. ஓராண்டு காலமாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்யாமல் வீணடித்துவிட்டு, இப்போது தடுப்பூசி தேவையை எப்படி நிவர்த்தி செய்யப் போகிறோம் என்பது பற்றியும் கூட ஒரு வார்த்தை அவரிடம் இருந்துவரவில்லை. உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று மக்கள் மீதும் மாநில அரசுகள் மீதும் பாரத்தை போட்டுவிட்டு உரையை முடித்துக் கொண்டார் பிரதமர். வயது முதிர்ந்தவர்கள் எப்படி தற்காப்பு நடவடிக்கை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கற்றுக் கொடுங்கள் என குழந்தைகளுக்கு அவர் அறிவுரை கூறிச் சென்றிருக்கிறார். கடந்தாண்டைப்போலவே துயரம் அதிகரித்து வரும்நிலையில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவச போக்குவரத்து குறித்துஎதுவும் சொல்லவில்லை. பண நிவாரணமோ அல்லது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலவச உணவு நிவாரணமோ - எதுவுமே அவரது உரையில் இல்லை. தேசம் கொடூரத்தின் பிடியில் சிக்கியிருப்பதை, தேசத்திற்கு உரையாற்றும் போது பிரதமர் மறந்துவிட்டாரா?

அவரது மனிதத் தன்மையற்ற அலட்சியம் இதுவரையிலும் எவரிடமும் நாம் கண்டிராதது. 

                                                ****************

கேரள அரசு கோவாவுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்திருப்பது பலராலும்பாராட்டப்பட்டுள்ளது. கோவாவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு, கர்நாடகா, லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அளித்திருக்கிறது. மற்ற மாநிலங்கள் சிரமத்தில் இருக்கும் போது கேரளா எப்படி பிற மாநிலங்களுக்கு தர முடிந்தது என்ற கேள்வி முக்கியமானது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் இடதுஜனநாயக முன்னணி அரசு முதலீடு செய்திருக்கிறது. இதற்கு முற்றிலும் முரணாக மத்திய அரசு முழுக்க முழுக்க போலி விளம்பரத்தில் ஈடுபட்டிருக்கிறது. ஆக்சிஜன் வழங்குவதாகட்டும், தொற்றை சமாளிக்க தேவையானபிற பொறுப்புகளை நிறைவேற்றுவதாகட்டும், மக்கள் மீதும் மத்திய அரசு மீதும் பொறுப்பை சுமத்தி விட்டு விலகி கொண்டிருக்கிறது மத்திய அரசு.

                                                ****************

சீரம் இந்தியா நிறுவனம், மோடி அரசின் புதிய தடுப்பூசி கொள்கை வெளியிடப்பட்டவுடனேயே கோவிஷீல்டு தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்து அறிவித்திருக்கிறது. ஒரு டோஸ் தடுப்பூசி மாநில அரசுகளுக்குரூ.400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600, மத்திய அரசுக்கு ரூ.150 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. மத்திய அரசே தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக, போதிய அளவுக்கு சமமாக, வெளிப்படை தன்மையுடன் விநியோக்கிக்க வேண்டும். இதற்கு ஆகும் செலவினத்திற்காக, பி.எம்.கேர்ஸ்என்ற பெயரில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை பிரதமர் அவசியம் செலவிட வேண்டும். கடந்த 70 ஆண்டு காலத்தில்இந்தியா எப்போதுமே அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தையே அமலாக்கி வந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 

                                                ****************

மேற்கு வங்க தேர்தலுக்காக ஹெலிகாப்டர்கள் மற்றும் ஜெட் விமானங்களை பயன்படுத்தி வகையில் அரசியல் கட்சிகள் நூறு கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டிருக்கின்றன. இதில் 90 சதவீதத்திற்கும் மேல் ஒரேஒரு கட்சி மட்டும் செலவிட்டிருக்கிறது. அந்த விபரங்கள் செய்திகளில் வெளியாகியுள்ளன. மார்ச் 15 ஆம் தேதி முதல் கொல்கத்தா விமான நிலையத்தில்70 தனியார் ஜெட் விமானங்களும் 300 ஹெலிகாப்டர்களும் தரை இறங்கியுள்ளன. அப்படி தரை இறங்கியது யார் என்பது உலகிற்கே தெரியும். நூறு கோடி. இந்த பணத்தைக் கொண்டு ஐந்து பெரிய மருத்துவமனைகள் கட்டலாம். ஆக்சிஜன் உற்பத்தி செய்கிற 25 பெரிய ஆலைகளை உருவாக்கலாம். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடலாம். 
ஆம். நாம் அறிவோம்... பி.எம்.கேர்ஸ்! 

                                                ****************

இந்தியாவில் 45 ஆண்டுகளுக்கு பிறகு மிக வேகமாக ஏழைகளின் எண்ணிக்கையும், ஏழ்மையின் விகிதமும் அதிகரித்து வருவதாக அதிர்ச்சிகரமான விபரங்கள் வெளியாகியுள்ளன. உலக வங்கி தரவுகளை பயன்படுத்திபியூ ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வில் வெளியாகியுள்ள விபரங்களில் டவுன் டூ எர்த் ஏடு விவரித்துள்ளது. அதன்படி இந்தியாவில் ஏழைகளின்எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. உலக வறுமை நிலையில் இந்தியாமிக மோசமான முறையில் உச்சத்தில் உள்ளது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டிற்கு பிறகு வெகுஜன வறுமை தேசம் என்ற நிலை ஏற்பட்டதுதான் துயரமானது. இப்போதும் கூட, மக்களுக்கு நேரடியாக பண நிவாரணம் தரவும், தேவைப்படும் அனைவருக்கும் இலவச உணவு தானியங்கள் தரவும் பிரதமர்மறுத்து வருகிறார். கிரிமினல்!

;