politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அமைச்சர் அமித் ஷா:- ஜார்க்கண்ட் மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம்.
ச.சா - வேற வழி.. கொஞ்சம் வாய்ப்பு கிடைச்சுருந்தா கர்நாடகத்துல மிதிச்ச மாதிரி மிதிச்சிருப்பீங்களே..??
 

செய்தி :- வங்கிகள் வழங்கிய கடன் 8% வளர்ச்சி.
ச.சா - கடன் தள்ளுபடி ஆனதுதான் அசுர வளர்ச்சியாமே..??
 

துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு :- விரைவில் ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை உணர்வீர்கள்.
ச.சா - மாநிலத்துல கூட்டணி ஆட்சி, மத்தில ஆறு வருஷமா ஆட்சினு பாஜக இருந்தும் இதுவரைக்கும் வளரலைனு சொல்ல வர்றாரா..?
 

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா :- மம்தாவுக்கு தேச நலனைக் காட்டிலும் அரசியலே முக்கியம்.
ச.சா - உங்களுக்கு ரெண்டையும் விட மத வெறிதான் முக்கியமா..??

;