politics

img

அதிமுக ஆட்சியின் ரூ.240 கோடி டெண்டர்கள் ரத்து

சென்னை, ஜூலை 13- கடந்த அதிமுக ஆட்சி யில் உரிய நடைமுறைகள் பின்பற்றாமல் விடப்பட்ட 240 கோடி ரூபாய் மதிப்பிலான 2 டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள் ளது. சென்னையில் கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் விடுவதில் உரிய நடை முறைகள் பின்பற்றாமல் அதிமுகவின் ஆதரவா ளர்களுக்கு டெண்டர் விடப் பட்டதாக அறப்போர் இயக்கம் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வந்தது. இந்த புகாரின் பெயரில் சென்னை மாநகராட்சி ஆணையர் நடத்திய ஆய்வில் சில புகார்களில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்னையில் அடை யாறு, அண்ணா நகர், கோடம் பாக்கம், ராயபுரம் உள்ளிட்ட 43 இடங்களில் மழைநீர் வடி கால் கட்டமைப்பை புதுப் பிக்க மற்றும் சீரமைக்க கடந்த பிப்ரவரி மாதம் டெண்டர் விடப்பட்டது. 120 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டரில் உரிய நடைமுறைகள் பின்பற்றப் படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல சென்னை யில் உள்ள 15 மண்டலங்க ளில் ரூ.120 கோடி மதிப்பில் 1500 ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்க விடப்பட்ட டெண்டரும் ரத்து செய்யப்ப ட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வலைதளங்க ளை பராமரிக்க கூடுதலான  தொகைக்கு விடப்பட்ட டெண்டர்கள் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்ட நிலை யில், தற்போது மேலும், இரண்டு டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.

;