லக்னோ:
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் - டீசல் விலையை மோடி அரசு உயர்த்தி இருப்பதாக சமாஜ்வாதி தலைவரும், உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் விமர்சித்துள்ளார்.
‘‘பாஜக ஆட்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்துஉள்ளது. உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோராக்பூர் பகுதியில் உள்ள மக்கள் எரிபொருள் வாங்க நேபாளத்திற்கு தள்ளப்படுகிறார்கள். விலைவாசி எல்லாவற்றையும் குறைப்போம் என்று கூறித்தான் பாஜக அரசு மக்களிடம் வாக்குகளைப் பெற்றது. ஆனால், வாக்குகளை வங்கிய பின்னர், தற்போது ஏன் பணவீக்கத்தை பற்ற வைக்கிறார்கள்? என்று தெரியவில்லை. 70 ஆண்டுகளில் நடைபெறாத விலை உயர்வை, பாஜகஇந்த ஒரே ஆண்டில் நடத்திக் காட்டியுள்ளது” என்று அகிலேஷ் கூறியுள்ளார்.இந்தியாவை விடவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இலங்கையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 61 ரூபாய்க்கும், நேபாளத்தில் ஒரு லிட்டர் 69 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.