நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக பாஜக சொல்லவே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி உள்ளார். இது நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள சூழலில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது கருப்புப் பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றே பாஜக கூறியது. மக்களுக்கு தலா 15 லட்சம் தருவோம் என்று கூறவில்லை என்று தெரிவித்தார். தற்போது நடக்கும் வருமான வரிச்சோதனைகளுக்கும் அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்த அவர், தன்னாட்சி முகமைகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது எனக் கூறினார்.
மேலும் பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி அரசிடம் கேள்வி கேளுங்கள். அதற்கான ஆதாரங்கள் பற்றி பாதுகாப்பு படையிடம் கேள்வி கேட்காதீர்கள் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.