politics

img

பிரதமர் மோடி திறந்து வைத்த பாலம் இரண்டு மாதங்களில் விரிசல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்குவழிச்சாலை மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தில் மார்ச் 25 அன்று விரிசல் ஏற்பட்டது. மேலும் அக்டோபர் மாதத்திலும் இடிந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் செய்துள்ளனர்.

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சாலையானது நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டு பணிகள் முடிவடைந்து, ஜனவரி 2019ல் கன்னியாகுமரியிலிருந்து பாரத பிரதமர் மோடியால் திறக்கப்பட்டன. இந்நிலையில் திறந்து இரண்டு மாதமே ஆன நிலையில் 2019 மார்ச் 25ல் மானாமதுரை நான்கு வழிச்சாலையில் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. மானாமதுரை பைபாஸ் சாலையில் ரயில் பாதையின் மேல் பகுதியில் கட்டப்பட்ட மேம்பாலம் விரிசல் ஏற்பட்டு மேம்படுத்தப்பட்டன. இதில் விரிசல் ஏற்பட்டுள்ள சாலையை மறைக்க 4 கண்டைனர் நிறுத்திவைத்து மறைத்தனர். இந்நிலையில் பழுதடைந்த சாலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆண்டி ஒன்றியக்குழு உறுப்பினர் வீரய்யா, முனிராஜ், விஜயகுமார், விஜய விநாயக மூர்த்தி செபஸ்டியன் ஆகியோர் மார்ச் 25ல் நேரில் பார்வையிட்டனர். இதுகுறித்து ஆண்டி கூறும்போது, மார்ச்2019-ல் மதுரை ராமேஸ்வரம் சாலையில் நான்கு வழிச்சாலையாக ரூ 937 கோடி ஒதுக்கி நடைபெற்றது. பிரதமர் மோடி கன்னியாகுமரியிலிருந்து ஜனவரியில் திறந்து வைத்த மேம்பாலம் இரண்டு மாதங்களில் கிரேக் விழுந்து சேதம் அடைந்துவிட்டன. இதனை தொடர்ந்து இப்பகுதியில் நான்கு லாரியை நிறுத்தி வைத்து, பாலத்தின் அடிப்பகுதியில் இரும்புத்தூண் கொண்டு பாலத்தை தாங்கி நிற்க வைக்கப்பட்டு பழுதான பணிகள் நடைபெற்று வந்தது. இதை நாங்கள் நேரில் பார்த்தோம். அதில் அங்கிருந்த பணியாளரிடம் , இப்பணி வழக்கமாக நடைபெறுவதுதான் என்றால் பிரதமர் மோடி திறந்து இரண்டு மாதம் கழித்து மேம்பாலம் இடிந்து விழும் நிலைக்கு போய் இருப்பதை ஏன் மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பொறியாளர் பேச மறுத்துள்ளார். இச்செயல் ஊழல் தன்மை வாய்ந்தது ஆகும். இச்சூழலில் தற்போது மீண்டும் அக்டோபர் 20ல் மேம்பாலத்தின் கைப்பிடி இடிந்து விழுந்துள்ளது. இப்பகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆண்டி சிஐடியு மாவட்ட செயலாளர் வீரய்யா ஒன்றியக்குழு உறுப்பினர் முனிராஜ் ஆகியோர் நேரில் பார்க்கும் போது மேலும் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. ஒரு பக்கம் சாய்வாகவும் உள்ளது. மேலும் தரம் குறைந்து கட்டுமான பணி நடந்துள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் சிஐடி மாவட்ட செயலாளர் வீரய்யா கூறும்போது இந்த தமிழ் தெரியாத தொழிலாளர்கள் இடிந்தகரை செய்ய செய்கிற வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் மேம்பாலத்தில் இருந்து மதுரை நோக்கி செல்கிற சாலையில் இறக்கத்தில் போடப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் ஒன்று கூட எரியவில்லை. நான்குவழிசாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை பயன்பாடு இல்லாமல் உள்ளது. மேலும் இறக்கத்தில் உள்ள கழிப்பறை கூட தண்ணீர் இல்லாததால் செயல்படவில்லை. மோட்டார் பழுதாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. இவற்றினால் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்ப்டுகிறது. இது கண்ணில் தெரிந்தவை ஆகும். இன்னும் தெரியாதது ஏராளம் ஆகும். இந்த ஊழல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தேசிய நெடுஞ்சாலை உதவி பொறியாளர் உதயசூரியன் கூறும் போது வழக்கமான பணிதான் என்றார். பதிலுக்கு இடிந்து விழுந்தது வழக்கமான பணி தானா என்று கேட்டதற்கு பதில் சொல்லவில்லை. 

மானாமதுரை ஒன்றியக் குழு உறுப்பினர் முனிராஜ் கூறும்போது, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சாலையில் தூரம் 175 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இந்த சாலை 1387 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை மேம்பாலம் தரம் இல்லாமல் உள்ளது. இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்