politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்...

பாஜகவை எதிர்க்க  சரத் பவார்தான் சரி! 

“தற்போதைய சூழ்நிலையில் அகில இந்திய அளவில் ஐக் கிய முற்போக்கு கூட் டணியை வழிநடத்த - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்தான் சரியான நபராக இருப்பார்” என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மேலும், “சரத் பவார் தலைமை தாங்குவதற்கு எந்தக் கட்சியினரும் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டார்கள்; மாநிலக் கட்சிகளும் இதை வரவேற்பார்கள்” என்று ராவத் குறிப்பிட்டுள்ளார். 

                                 **************

இஸ்லாமியர்கள் இணைந்தால்  4 புதிய பாகிஸ்தான் உருவாகும்

“சிறுபான்மை மக்களாகிய நாம், நாட்டில் 30 சதவிகிதம். அவர் கள் 70 சதவிகிதம். இந்தியா முழுவதும் 30 சதவிகித மக்களும் ஒன்று கூடினால், நம்மால் 4 புதிய பாகிஸ்தானை உருவாக்க முடியும். அப்போது இந்த70 சதவிகித மக்கள் எங்கே போவார்கள்?”என்று திரிணாமுல் தலைவர் ஷேக் ஆலம், மதப் பாகுபாட்டைக் கிளப்பியுள்ளார். மம்தா பானர்ஜி மீதுதான் இஸ்லாமியர்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

                                 **************

‘சங் பரிவார்’ என்ற பெயர் பொருத்தமாக இல்லை!

உ.பி. மாநிலம் ஜான்சி ரயில் நிலையத்தில் கேரள கன்னியாஸ்திரிகள், ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவினரால் துன்புறுத் தப்பட்டதை ராகுல் காந்தி கண்டித்துள் ளார். “ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு
களை இனி ‘சங்-பரிவார்’ என நான்அழைக்க மாட்டேன். ‘பரிவார்’ என்பதற்கு ‘குடும்பம்’ எனப் பொருளாகும். ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள்இருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் உள்ளோர் அவர்கள் மீது மரியாதையுடன் இருப்பார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ் சார்ந்த அமைப்புக்களிடம் இது எதுவும் இல்லை” என ராகுல் சாடியுள்ளார்.

                                 **************

ஏழுமலையானே ஆனாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டும்!

திருப்பதி ஏழுமலை யான் கோயிலுக்கான சொத்துக்கள், விலை உயர்ந்த பொருட்கள் பக்தர்களுக்கான விடுதிகள், பிரசாத லட்டுக்கான மூலப் பொருட்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி-யிலிருந்து விலக்குஅளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு, எந்த கோவிலுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படாத நிலையில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டும் ஜிஎஸ்டி விலக்கு வழங்க முடியாது என்றுநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்அளித்துள்ளார்.

                                 **************

அனில் தேஷ்முக்கை  சிபிஐ விசாரிக்க கோரிக்கை

ஒவ்வொரு மாதமும் ரூ. 100 கோடிமாமூல் வசூலித்து தரும்படி கட்டாயப் படுத்தியதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது குற்றம்சாட்டிய ஊர்க்காவல் படை டிஜிபி- பரம்பீர்சிங், தனது குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பரம்பீர்சிங் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.