politics

img

லக்கிம்பூர் வன்முறை ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஒப்பானது... பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் கண்டனம்...

சண்டிகர் 
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் ஒன்றிய பாஜக உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் அரங்கேற்றிய வன்முறை சம்பவத்தில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர். 

இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் போராட்டங்கள், கண்டன குரல்கள் எழுந்து வரும் நிலையில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சண்டிகரில் நடைபெற்ற லக்கிம்பூர் வன்முறை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்துள்ளார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சரண்ஜித் சிங்," லக்கிம்பூர் வன்முறை சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஒப்பானது. காட்டுமிராண்டித்தனமானது. அமைதியாக போராட்டம் நடத்தி வரும் அப்பாவி விவசாயிகளை வேண்டுமென்றே நசுக்க இந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என கொதித்தெழுந்து பேசியுள்ளார்.