புதுதில்லி:
நாட்டின் ஜிடிபி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ந் துள்ள நிலையில், பல கோடி பேர்வேலை மற்றும் வருவாயை இழந்துவறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் வருமானம் மட்டும், கடந்த ஓராண் டில் 50 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.
2019-20ஆம் ஆண்டில் பாஜகவின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.3ஆயிரத்து 623 கோடியே 28 லட்சமாகஉயர்ந்துள்ளது.2019-2020 நிதியாண்டில் பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஆகிய 7 தேசிய கட்சிகளுக்கு கிடைத்த மொத்த வருவாய் 4 ஆயிரத்து 758 கோடியாகும். இதில், பாஜகவுக்கு மட்டும் ரூ. 3 ஆயிரத்து 623 கோடி அளவிற்கு வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் பெற்ற வருவாயை விட 50.34 சதவிகிதம் அதிகம்ஆகும். முந்தைய 2018-19 நிதியாண்டில் பாஜக-வின் வருமானம் ரூ. 2,410 கோடியாக இருந்த நிலையில், அது2019-20 நிதியாண்டில் ரூ. ஆயிரத்து 213 கோடியே 20 லட்சம் கூடுதலாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 2019-20 நிதியாண்டில் ரூ. 682 கோடியே 21 லட்சம்என்ற அளவிற்கே வருமானம் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 25 சதவிகிதம் குறைவு. 2018-19 நிதியாண்டில் ரூ. 918 கோடி என்ற அளவிற்கு காங்கிரசுக்கு வருவாய் கிடைத்திருந்த நிலையில், 2019-20 நிதியாண்டில் ரூ. 236 கோடி குறைந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரசுக்கு 2019-20 நிதியாண்டில் 143 கோடியே 67 லட்சம் அளவிற்கும், தேசியவாத காங்கிரசுக்கு ரூ. 85 கோடியே 58 லட்சம் அளவிற்கும் வருவாய் கிடைத்துள்ளது. தேசியவாத காங்கிரசின் வருவாய் 2018-19 நிதியாண்டில்ரூ. 34 கோடியே 87 லட்சமாக இருந்தநிலையில், 2019-20 நிதியாண்டில் அது 68 சதவிகிதம் அதிகரித்துள் ளது.அதேநேரம் செலவுகள் என்றுஎடுத்துக் கொண்டால், பாஜக தனக்குகிடைத்த ரூ. 3 ஆயிரத்து 623 கோடிரூபாயில் 45.57 சதவிகிதம் குறைவாக, ரூ. ஆயிரத்து 651 கோடியை மட்டுமே செலவிட்டுள்ளது. ஆனால்காங்கிரஸ் கட்சி தனக்கு கிடைத்த வருவாயான ரூ. 682 கோடியைக் காட்டிலும் ரூ. 316 கோடி (46 சதவிகிதம்) அதிகமாக ரூ. 998 கோடியே 15 லட் சம் செலவிட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ரூ. 107 கோடியே 27 லட்சம் செலவிட்டதாக கணக்கு காட்டியுள்ளது.இந்த ஒட்டுமொத்த வருமான - செலவுக் கணக்கு என்ற நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒவ் வொரு கட்சியும் எவ்வளவு வருவாய் திரட்டின என்ற புள்ளி விவரங்களும் வெளியாகியுள்ளன.கடந்த 2019-2020 நிதியாண்டில் பாஜ, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன்சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 7 தேசியகட்சிகள் மொத்தமாக ரூ. 4 ஆயிரத்து 758 கோடியை தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் திரட்டியுள்ளன என்றாலும், இவற்றில், பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 4 தேசிய கட்சிகள் மட்டும் 87.29 சதவிகித நன்கொடையை வாரிக் குவித்துள்ளன.
ரூ.4 ஆயிரத்து 758 கோடிக்கானதேர்தல் நிதிப் பத்திரங்களில், ரூ.3 ஆயிரத்து 429 கோடியே 56 லட்சத்திற்கான பத்திரங்கள் மட்டுமே பணமாக மாற்றப்பட்டுள்ளன. இதில், பாஜக 2 ஆயிரத்து 555 கோடியும், காங்கிரஸ் ரூ. 317 கோடியே 86 லட்சமும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ. 100 கோடியே 46 லட்சமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி93 கோடியே 01 லட்சமும், தேசியவாத காங்கிரஸ் ரூ. 20 கோடியே 50 லட்சமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 3 கோடியே 02 லட்சமும் நன்கொடைகளாக பெற்றுள்ளன.இதுதொடர்பான புள்ளிவிவரங்களை ஜனநாயக சீர்திருத் தத்திற்கான அமைப்பு (ஏடிஆர்) தொகுத்து அளித்துள்ளது.