politics

img

2023-24இல் பாஜக பெற்ற நன்கொடை 87.12% அதிகரிப்பு!

மக்களவைத் தேர்தல் நடந்த 2023-24 ஆண்டில், பாஜக ரூ.3,967.14 கோடி நன்கொடையை பெற்றுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் பெற்ற நன்கொடையை (ரூ.2,120.06 கோடி) விட 87.12% அதிகமாகும்.
பாஜக தாக்கல் செய்த ஆண்டு தனிக்கை அறிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஜக பெற்றுள்ள நன்கொடை 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.2,120.06 கோடியிலிருந்து 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.3,967.14 கோடியாக 87%அதிகரித்துள்ளது. 2023-2024 ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.1,685.62 கோடி நன்கொடை பெற்றுள்ளது பாஜக. இது பாஜக-வின் மொத்த நன்கொடையில் 42.48% ஆகும். 
2023-24 நிதியாண்டில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு ரூ.1,754.06 கோடி செலவு செய்துள்ளது. இதுவே 2022-23-ஆம் நிதியாண்டில், தேர்தல் பிரச்சாரங்களுக்கு ரூ.1,092 கோடி செலவு செய்துள்ளது.  விளம்பரங்களுக்கு மட்டும் 2023-24 நிதியாண்டில் ரூ.591.39 கோடியை பாஜக செலவு செய்துள்ளது.