politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் தனித்தனியாக நடந்திருந்தால் எங்கள் பலத்தை நிரூபித்திருப்போம்.
ச.சா - நாடாளுமன்றத் தோல்விக்கு பாஜகவக் குறை சொல்றாரோ..??
 

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் :- இருமொழிக் கொள்கையில் இருவரும் ஒரே படகில்தான் செல்கிறோம்.
ச.சா - யாரு.. நீங்களும், பாஜகவுமா..??
 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் :- ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்.
ச.சா - அது உங்க படை விமானம்னு ஈரான் சொல்லுதே..??
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.
ச.சா - ஆணவக் கொலையெல்லாம் அமைதியாத் தெரியுதோ..??