தமிழக அரசு :- உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி திமுக தொடர்ந்துள்ள வழக்கு உள்நோக்கம் கொண்டது.
ச.சா - தேர்தல் நடத்தாமலேயே இருப்பது நல்ல நோக்கமோ..?!?
*****
செய்தி :- ஜார்க்கண்டு மாநிலத்தில் பாஜக அலுவலகத்தை மாவோயிஸ்ட்டுகள் குண்டு வைத்து தகர்த்தனர்.
ச.சா - மாவோயிஸ்ட்டுகள ஒடுக்கிட்டதா பாஜக பிரச்சாரம் பண்ணுச்சே..?!!
*****
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்:- பாஜகவுடன் ஆர்.எஸ்.எஸ். இணைந்து விடலாம்.
ச.சா - ஆர்.எஸ்.எஸ்.தானே தாய்க்கழகம்....?!?!
*****
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்:- திமுக ஆட்சியில் பெண்களுக்கான குற்றங்கள் நடந்தன.
ச.சா - பொள்ளாச்சி உத்தரப் பிரதேசத்துலயா இருக்கு...?!?