கோவையில் பிரதமர் மோடி:- முதல் ஓட்டு நல்ல காரியத்துக்கு பயன்படுத்துங்கள்.
ச.சா - அப்படின்னா அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்துக்குல போடுவாங்க..!!
மத்திய அரசு :- வருமானவரித்துறை நடவடிக்கையில் சிறிதும் பாரபட்சமில்லை.
ச.சா - எல்லா எதிர்க்கட்சிகள் மேலயும் ரெய்டுனு சொல்றாங்களோ...?!?
பிரதமர் மோடி :- காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டிருந்தால் பாகிஸ்தான் பிரிந்திருக்காது.
ச.சா - சுதந்திரத்துக்கே போராடாததுதான் உங்க புத்திசாலித்தனமா..?!
திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி :- பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரசே காரணம்.
ச.சா - பாஜக கூட சேர்ந்து மத்திய அமைச்சர்லாம் ஆனீங்களே..?!