மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதிநீக்கம் குறித்து பாஜக எம்.பி., ஹேமா மாலினி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்கவிருந்த வினேஷ் போகத், 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பதாகக் கூறி, ஒலிம்பிக் அமைப்பு அவரை தகுதி நீக்கம் செய்திருப்பதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளன. தங்கம் கிடைக்குமென பெரிதும் எதிர்பார்த்திருந்த வினேஷ் போகத்துக்கு இப்படி நிகழ்ந்தது குறித்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
இந்நிலையில் பாஜக எம்பி ஹேமா மாலினி கூறியது சர்சையை கிளப்பியுள்ளது. அதாவது, "100 கிராம் அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் பெற்றது ஆச்சரியமாக இருக்கிறது. சரியான எடையை வைத்துக்கொள்வது முக்கியமானது. இது அனைவருக்குமான பாடம். விரைவில் 100 கிராம் எடையை குறைப்பாரென எதிர்பார்க்கிறேன். ஆனால், வினேஷ் போகத்துக்கு வாய்ப்பு கிடைக்காது” என அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்துக்கு ஹேமா மாலினியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.