tamilnadu

img

வறுமையை திசைத்திருப்பவே சர்ச்சை மசோதாக்கள் தாக்கல்.. மோடி அரசு மீது குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

புதுதில்லி:
வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளைத் திசைத்திருப் பவே, சர்ச்சைக்குரிய மசோதாக்களை மோடி அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான குலாம்நபி ஆசாத் குற் றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் குலாம்நபி ஆசாத் மேலும் பேசியிருப்பதாவது:குடியுரிமை திருத்த மசோதாவை ஒட்டுமொத்த தேசமும் ஏற்றுக்கொண்டதாகவும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அரசு கூறுகிறது. அப்படியானால், ஏன் அசாம், திரிபுரா,அருணாசலப்பிரதேசம், மேகாலயா,நாகாலாந்தில் போராட்டங்கள் நடக்கின்றன? குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கையில் இருந்துவரும் இந்துக்களையும், பூடானில் இருந்து வரும் கிறிஸ்தவர்களையும் ஏன் சேர்க்கவில்லை? 
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் லட்சக்கணக்கிலான கோடிக்கணக்கிலான முஸ்லிம்களும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.ஆனால், அரசிடம் இந்த 3 நாடுகளிலும் சிறுபான்மையினர் எந்தளவிற்கு துன்புறுத்தப்பட்டார்கள் என்பதற்கு எந்தவிதமான புள்ளி விவரங்களும் இல்லை.பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, முத்தலாக் மசோதா, என்ஆர்சி, அரசியலமைப்பு 370 பிரிவு ரத்து போன்றவற்றையும் இதேபோன்றுதான் நீங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தீர்கள். ஒவ்வொரு 4 முதல் 6 மாதத்துக்கு ஒருமுறையும் இதுபோன்ற மசோதாக் களைக் கொண்டு வந்து மக்களின் கவனத்தை வேலையின்மை, விவசாயிகள்பிரச்சனை, ஏழ்மை, வறுமை ஆகியவற்றில் இருந்து திசைத் திருப்புகிறீர்கள்.இவ்வாறு குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.